Home  |  ஆரோக்கியம்

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களின் ஆரோக்கியம்!

உங்கள் கருப்பையில் முட்டை வளரும் காலத்திலிருந்தே உங்கள் குழந்தையின் ஊட்டச்சத்து உங்கள் கைகளில் உள்ளது. ஆகவே நீங்கள் கருவுற்றிருக்கும் போது இருக்கும் போது உங்கள் உடலின் ஊட்டச்சத்து ஒரு மிக மிக முக்கியமான பங்கை ஆற்றுகிறது. நீங்கள் உட்கொள்ளும் பொருட்களில் கவனமாக இருப்பது நல்லது. இரண்டாவது உயிர் ஒன்று உங்களுக்குள் வளர்ந்து வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கருவுற்றிருக்கும் முதல் 3 மாத காலத்தில் நம் குழந்தையை பெறப்போகிறோம் என்ற மகிழ்ச்சி இருக்கும்.

 

     அதே சமயத்தில் அடிக்கடி குமட்டலும் வந்து கஷ்டப்படுத்தும். கருவுற்றிருக்கும் பெண்கள், எதைச்சாப்பிடவேண்டும், அல்லது எதைச் சாப்பிடக் கூடாது என்பது பற்றிய தவறான தகவல்களினால், சில சமயம் ஞயசயnடியை என்ற பீதி மனநோயால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இதனால் உணவுகளில் எவ்வளவு கொழுப்பு சத்து உள்ளது என்று கணக்கு போடுவதும், சாதாரணமாக உட்கொள்ளும் அப்பம் போன்றவற்றை சாப்பிட்டபிறகு பெரிய குற்ற உணர்வு ஏற்பட்டு இவர்கள் அல்லல் படுவதுண்டு. மற்ற நேரத்தை விட உங்கள் வாழ்க்கையில் கருவுற்று இருக்கும்போது ஊட்டச்சத்து அதிகமாக தேவைப்படுகிறது. அதற்காக உங்களுக்கு பிடிக்காத உணவை நீங்கள் சாப்பிட வேண்டிய அவசியமில்லை.

 

     ஆனாலும், கருவுற்றிருக்கும் போது சில வகையான உணவுப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. இது கருவின் வளர்ச்சியை பாதிக்கும். சாப்பாட்டின் மேல் வெறுப்பு, வாசனையில் மாற்றங்கள், குமட்டல், வாந்தி, இதனால் ஏற்படும் கர்ப்பகால தொல்லைகள், `ஆடிசniபே ளுiஉமநேளள' போன்றவைகள் கருவுற்றிருக்கும் முதல் 3 மாத காலங்களில் ஏற்படும். இவை பிறவிக் குறைகளை உருவாக்கும் இயற்கை தாவரங்கள் மற்றும், பாக்டீரியவின் நச்சுத் தன்மைகளிலிருந்து பாதுகாக்கவே உடலில் ஏற்படுகின்றன.

 

     மனிதர்களின் துவக்க காலத்திலிருந்தே, அதாவது மிருகங்களை வேட்டையாடி, காட்டுத் தாவரங்களை உணவாக உட்கொண்ட காலத்திலிருந்தே நம்முள் இதுபோன்ற இயற்கையான தடுப்பு சக்தி இருந்து வருகிறது.
சில பெண்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படுவதில்லை. எந்தவிதமான நச்சுப் பொருளும், அபாயகரமான உணவும் இவர்களை ஒன்றும் செய்யாவிட்டாலும், கருவுற்றிருக்கும் முதல் 3 மாத காலத்தில் இவர்கள் அதுபோன்ற உணவை தவிர்ப்பது நல்லது.

 

     பூண்டு போன்ற காரமான மற்றும் கசப்பான உணவுகளையும், சுடப்பட்ட, வறுக்கப்பட்ட இறைச்சி உணவுகளையும், டீ, காபி போன்றவைகளையும் தவிர்ப்பது நல்லது. கீரை வகைகள் எளிதில் ஜீரணமாகாது. மாதவிடாய் இல்லாமல் போவது, சிறிய அளவில் எடை அதிகரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் மார்பகங்களில் பொறிபொறியாக வருவது ஆகியவற்றை கருவுற்றிருக்கும் முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகள் எதிர்பார்க்கலாம்.

 

     ஆனால், அளவுக்கதிகமான குமட்டல், வாந்தி, தலைவலி மற்று அவ்வளவு பயம் அவசியமற்றது. ஓரளவுக்கு நடுநிலையான உணவை உட்கொண்டு, ஆரோக்கியத்தை நன்றாகவே பராமரிக்கலாம். பெரிய கவலை ஒன்றும் தேவையில்லை. கருவுற்றிருக்கும் முதல் 3 மாத காலத்தில், குழந்தையின் முக்கியமான உறுப்புகளின் வளர்ச்சியும், உடல் அமைப்புகளின் உருவாக்கமும் நடைபெறுகிறது. இதனால் கருவிற்கு உங்கள் கவனம் அதிகமாக தேவைப்படுகிறது. சுத்தமான புறச்சூழல்களையும், ஊட்டச்சத்து மிக்க உணவு, நச்சுகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை நீங்கள் அளித்தாலே போதுமானது.

 

     உங்களிடம் என்ன மாற்றம் ஏற்பட்டாலும், வெறும் பால் மட்டும் சாப்பிட்டாலே போதும் 100 காலோரி முதல் 200 கலோரி வரை ஏறிவிடும். ஆனால் கடைசி 6 மாத காலத்தில் குழந்தையிடம் காணப்படும் வளர்ச்சியினால், உங்களுக்கு கலோரியின் அளவு இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. முதல் 3 மாதங்களில் கலோரி உணவு உட்கொள்ளுதல் அவ்வளவு முக்கியமானதல்ல. உடலை ஒரு நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்திருந்தாலே போதும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!