Home  |  ஆரோக்கியம்

குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறதா !!

குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறதா !!

அம்மாக்கள் கவனத்திற்கு சில டிப்ஸ் குழந்தைகள் எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டேங்குதே - இதுதான் பல அம்மாக்களின் புலம்பல். சரியாக சாப்பிடாத காரணத்தால் அடிக்கடி அழுது தொந்திரவு கொடுக்கும் குழந்தைகள் சில என்றால், ஒண்ணேமே சாப்பிடா விட்டாலும் எனர்ஜிடிக்காக சுத்தும் ஹைபரேக்டிவ் குழந்தைகள் இன்னொரு வகை. சில குழந்தைகளுக்கோ வகை வகையாக வேண்டும். என்ன சமைப்பதுன்னு குழம்பி குழம்பி கிடப்போம். இப்படி பல குழந்தைகள் இருக்க குழந்தைகள் நன்றாக வளர என்னென்ன சாபிடலாம்னு பார்க்கலாம் வாங்க -

 

ஒவொரு குழந்தைக்கும் தாய்ப்பாலே சிறந்த உணவு. அதற்கு நிகர் ஏதும் இல்லை. அது குழந்தையின் உரிமை.தாயின் கடமை.
குழந்தை சற்று வளர்ந்த பிறகு திட ஆகாரம் சாப்பிட பழக்க வேண்டும். சின்னதிலிருந்தே பால் மாத்திரமே 6 மாதம் முதல் 7 மாதம் வரை குடித்து வளரும் குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் அடம் பிடிக்கும்.


குழந்தைகளுக்கு சத்துமாவு கஞ்சியும் நல்லது தான் நெஸ்டம் புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்றது செரிலாக் கோதுமையின்
அடிப்படையில் தயாரிக்கப் படுகிறது இவற்றையும் கொடுக்கலாம். நெஸ்டம் முதலில் பாலில் கரைத்து அதிக திடமாக இல்லாமலும், அதிக நீராக இல்லாமலும் இருக்கும் பக்குவத்தில் கலந்து ஊட்ட வேணும்.


நெஸ்டம் கொடுக்கும் போது, அதை பாலில் கரைத்துக் கொடுப்பது போல், பருப்புத் தண்ணீரில் கலக்கலாம். வாழைப்பழத்தை மசித்து அத்துடன் கலந்து கொடுக்கலாம். ஆப்பிளை குக்கரில் வைத்து அவித்து , நன்கு மசித்து அத்துடன் நெஸ்டம் கலந்தும் கொடுக்கலாம்.

மசித்த உருளைக்கிழங்கு, பலவகையான பழவகைகள் மசித்துகம் கொடுக்கலாம். இட்லி ஒரு நல்ல உணவு. இட்லியில் இருக்கும் உளுந்து குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சத்துமாவில் கூட இட்லி ஊற்றி கொடுக்கலாம்.இட்லியுடன் நெய் கலந்து பிசைந்து கொடுக்கலாம்.


தினமும் காலை 5 மணிக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் மறந்த குழந்தை எனில் பால் 1 டம்பளர் கொடுக்கலாம்.
காலை 8 மணிக்கு இட்லி அல்லது நெஸ்டம் திட உணவாக கொடுக்கலாம்.


மீண்டும் காலை 9.30 மணிக்கு சிறிது பால் கொடுக்கலாம். மேலும் 12 .மணிக்கு கஞ்சி அல்லது நெஸ்டம் கொடுக்கலாம்.
மதியம் 1.30 மணிக்கு பால் கொடுக்கலாம். சாயுங்காலம் 4 மணிக்கு பழ மசியல் மற்றும் திட உணவு பிஸ்கட் போல எதாவது கொடுக்கலாம்.


மாலை 6 மணிக்கு தாய்ப்பால் அல்லது பசும்பால் கொடுக்கலாம். மேலும் 8 மணிக்கு திட ஆகாரம் தரலாம்.
கடைசியாக இரவு 10 மணிக்கு தாய்ப்பால் கொடுக்கவும்.


குழந்தைகளுக்கு செரிலாக் அதிகம் கொடுப்பதால் இனிப்புச் சுவை நாக்கிற்கு பழக்கமாகிவிடும். ஒன்பது மாதம் ஆகும்போது தெளிவான ரசம் கலந்து நெஸ்டம் உடன் தரலாம். கொஞ்சம் கொஞ்சமாக உணவுடன் உப்பு காரம் பழக்க வேண்டும்.

மேலும் இவையணைத்தும் மருத்துவரின் ஆலோசனைப் படி வேகவைத்த முட்டை, ஆட்டு இறைச்சி என மெல்ல மெல்ல சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.


சாப்பாடு ஊட்ட எவளவோ வழி இருக்கிறது மிகவும் முக்கியமானது ஓடி ஓடி உணவு ஊட்டக் கூடாது. டீவி பார்த்தால் குழந்தை உண்கிறது என்பதற்காக டீவியின் முன் குழந்தையை உட்காரவைத்து சோறு ஊட்டக் கூடாது. குழந்தை உட்காரத் துவங்கிய உடன், நாம் உண்ணும்போது ஒரு சிறு தட்டில் சோறு போட்டு தன் கையால் தானே உண்ண பழக்க வேண்டும். நிலாவை கட்டி சாப்பாடு ஊட்டலாம். வீட்டு தோட்டத்தில் உள்ள பூக்கள் என வெவ்வேறு புது யுக்தி கொண்டு குழந்தைகளை சாப்பிட பழக்க வேண்டும் மிக முக்கியமானது சாப்பிடும் போது குழந்தைகளை அடிக்காதீர்.

 

  27 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!