Home  |  ஆன்மிகம்

சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் !!

சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் !!

 

கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர்.

 


கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்பு களையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாக வும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும். சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது.

 

 


உலகத்தில் சிறப்பு மிக்க ஆலயங்களில் பஞ்சபூத ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் வரும் மே 1ல் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. பல வருட சிறப்பான கோவில் கும்பாபிஷேகம் காணும் போது நிறைய பலன்கள் நமக்கு கிடைக்க பெறுவோம் என்பது ஐதீகம் .

 

 


எனவே பூஜை முன்னேற்பாடாக இன்று திருநிறை நன்னாளில் யாகசாலை பூஜை இனிதே துவங்கியது.
இன்று காலை கூஷ்மாண்ட ஹோமம், கணபதிஹோமம், நாளை காலை தன பூஜை, மாலை வாஸ்து சாந்தி நடக்கிறது. ஏப்ரல் 24 ம் தேதி காலை மிருத்சங்க்ரஹணம், ரட்சாபந்தனம், ஏப்ரல் 25 ம் தேதி காலை கலாகர்ஷணம், கட ஸ்தாபனம், மாலை முதல் கால யாகபூஜை நடக்கிறது.

 

 


இவ்வாறு ஒவொரு தினமும் பூஜைகள் நடைபெற்று 30 ம் தேதி காலை பத்தாம் கால யாகபூஜையும் அன்று மதியம் 11ம் கால யாகபூஜையும் மாலை 12ம்
கால யாகபூஜை நடக்க இருக்கிறது.

 

 


அடுத்த நாள் மே 1ம் தேதி காலையில் வடுகபூஜை, கோபூஜை, கஜபூஜை, அச்வ பூஜையைத் தொடர்ந்து, நற்பொழுது காலை 7.00-8.30 மணிக்குள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது,

 

 


அன்று இரவு தெருவடைச்சான் பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்த பிறகு மே 2ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் லட்சார்ச்சனையும் நடக்கிறது. மே 3ம் தேதி காலை அகிலாண்ட ஈஸ்வரர் நடராஜருக்கு மகா அபிஷேகமும் மதியம் 2.00 மணிக்கு ராஜசபையில் கும்பாபிஷேக விசேஷ தரிசனமும் நடக்க இருக்கிறது.

 

 

மே 4ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு நடக்கும். அனைத்து விழா நாட்களிலும் இசை நாட்டிய நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. பகவானின் அருள் பெற்று பக்தியில் திளைத்து கோடி புண்ணியம் பெறுக.

  22 Apr 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!