Home  |  அறுசுவை

சிக்கன் சம்பல்(Chicken Sambal)

சிக்கன் சம்பல்(Chicken Sambal)

தேவையானவை :

 

சிக்கன் - 1/2 கி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - ஒரு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 10

எலுமிச்சை - ஒன்று சிறியது

மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவைகேற்ப

உப்பு - தேவையான அளவு

தக்காளி - ஒன்று

 

செய்முறை :

 

1.முதலில் தக்காளியை பொடியாகவும்,வெங்காயத்தை நீளமாகவும்  நறுக்கி பச்சை மிளகாயை  கீறியும் வைக்கவும்.காய்ந்த மிளகாயை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக அரைக்கவும்.

 

2.அரை கிலோ சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் மற்றும் பாதி உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.சிறிதளவு எண்ணெயில் மிளகாய் விழுதை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.ஊறவைத்த சிக்கனை அரை வேக்காடாக பொரித்தெடுக்கவும்.

 

3.மேலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.இதனுடன் வதக்கி வைத்துள்ள மிளகாய் விழுத்து சேர்த்து வதக்கவும்.

 

4. கரம் மசாலா சேர்த்து பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பிறகு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கவும்.

CHICKEN SAMBAL

Ingredients for CHICKEN SAMBAL :


Chicken - 1/2 Kg,

Ginger Garlic Paste - 2 Tbsps,

Garam Masal - 1 Tbsp,

Dry Chilly - 10,

Lemon - 1 ,

Turmeric Powder - 2 Tbsps,

Onion - 2,

Green Chilies - 2,

Sugar - 1 Tbsp,

Tomato - 1,

Salt & Oil - as needed.


Method to make CHICKEN SAMBAL :


1. Chop the tomatoes finely. Then chop the onion and green chilies vertically. Soak the dry chilies for 10 mins and grind it well. 

2. Put chicken pieces in a bowl then add ginger garlic paste, lemon extract, turmeric powder and salt all together and mix them well. Soak it for an hour. Fry the dry chilli paste in a pan. Keep it aside. Heat oil in a pan and fry the chicken pieces. It should be half boiled. Keep it aside. 

3. Heat oil in a pan then add onion fry it till gets golden color. Then add green chilies, tomato and allow it to fry well. Then add fried chillli paste along with them. 

4. Add garam masal and fried chicken pieces then fry well. When oil floats turn off the stove.


Tasty and Spicy CHICKEN SAMBAL is ready to serve.

  15 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!