Home  |  அறுசுவை

சிக்கன் நெய்சோறு (Chicken Ghee Rice)

தேவையானவை :

 

சிக்கன் - 1/2 கிலோ

பாசுமதி அரிசி - 1/2 கிலோ

மிளகாய்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 100 கிராம்

உப்பு - தேவைக்கு ஏற்ப

எலுமிச்சைபழம் - அரை மூடி

பச்சைமிளகாய் - 10

வெங்காயம் - கால் கிலோ

தக்காளி - 3

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 10 பல்

ஏலம் - 3

கிராம்பு - 3

பட்டை - சிறிது

புதினா - கால் கட்டு

கொத்தமல்லி இலை - கால் கட்டு

முந்திரிப்பருப்பு - 10

தேங்காய் - அரை மூடி

நெய் - 100 கிராம்

 

 

செய்முறை:

 

1.முதலில் அரிசியை நன்கு கழுவி அதனுடன் 1 1/2 மடங்கு நீர் ஊற்றி குழையாமல் வடித்து கொள்ளவும்.இதனை ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவைக்கவும்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.

 

2.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தனியே வைக்கவும்.பிறகு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும்.அதில் பாதியை எடுத்து தனியாக வைக்கவும்.

 

3.வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த பொருட்களைப் போட்டு வதக்கி, வாசனை வரும் போது மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.பிறகு கரம் மசாலா சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு எண்ணெய் சுண்டும் வரை கிளறி, கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான தணலில் வேக வைக்கவும்.அதனுடன் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

 

4.சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும்.பிறகு கொத்தமல்லி புதினாவைத் தூவவும். ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும்.கடைசியில் வறுத்த முந்திரிப்பருப்பு, வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.

Chicken Ghee Rice

Ingredients for Chicken Ghee Rice:

 

Chicken-1/2 Kg

Basmati Rice-1/2 Kg

Chilly Powder-1 Tbsp

Garam Masala-1 Tbsp

Oil-100 G

Salt-as Needed

Lemon-Half

Green Chilly-10

Onion-1/4 Kg

Tomato-3

Ginger-1 Piece

Garlic-10 Flakes

Cardamom-3

Cloves-3

Cinnamon-Little

Mint-1/4 Bunch

Coriander Leaves-1/4 Bunch

Cashew Nuts-10

Coconut-1/2 Cup

Ghee-100 G

 

Procedure to make Chicken Ghee Rice:

 

1. First boil the rice and allow to cool. Chop the onion and tomatoes. Grind the coconut well.

2. Fry the cashew nuts in ghee and set aside. Heat ghee in a pan, add cinnamon, cloves, cardamom and let to splutter and then add onion and saute well.

3. Then add chilly powder, turmeric powder and stir well. Add garam masala, chopped chicken and ground coconut paste. Allow medium flame to boil and add salt to taste.

4. When chicken boiled well, add lemon juice. Add coriander leaves and mint leaves. Then add the chicken into boiled rice and mix well. Finally garnish with cashew nuts, onion and ghee.

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!