Home  |  அறுசுவை

கோழிக்குழம்பு (Chicken Curry)

தேவையானவை :

 

கோழி - அரை கிலோ 

சின்ன வெங்காயம் - 1 கப்

நறுக்கிய தக்காளி - 1 கப்

இஞ்சி பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்

மல்லித் தூள் - மூன்று ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

தாளிக்க தேவையானவை :

 

வெந்தயம் - கால் ஸ்பூன்

கறிவேப்பிலை - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கிராம்பு - தேவையான அளவு

பிரியாணி இலை - தேவையான அளவு

சோம்பு - கால் ஸ்பூன்

பட்டை - தேவையான அளவு

 

 

அரைக்க தேவையானவை :

 

சோம்பு - கால் ஸ்பூன்

சீரகம் - கால் ஸ்பூன்

மிளகு - கால் ஸ்பூன்

பச்சை அரிசி - கால் ஸ்பூன்

பூண்டு - ஒரு பல்

கிராம்பு - இரண்டு

மேற்கண்ட பொருட்களை எண்ணெய் இல்லாமல் அரை பொன் வறுவலாக வறுத்து, பூண்டு வைத்து, தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்.

 

செய்முறை :

 

1.முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் ஆகியவற்றையும் போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

2.மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். அந்த மசாலாவை நறுக்கிய கோழி துண்டுகளுடன் நன்கு பிசைந்து கொள்ளவும். வதங்கி கொண்டு இருக்கும் மசாலாவுடன் கோழியை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு 2 கப் தண்ணீர் விட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து குறைந்த சூட்டில் வேகவிடவும். கோழி நன்றாக வெந்தவுடன் பொடித்து வைத்து இருக்கும் மசாலாவை கொதித்து கொண்டு இருக்கும் குழம்புடன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

Chicken Curry

Ingredients for Chicken Curry:

 

Chicken-1/2 Kg

Small Onion-1 Cup

Chopped Tomato-1 Cup

Ginger, Garlic Paste-2 Tsp

Coriander Powder-3 Tsp

Chilly Powder-1 Tsp

Turmeric Powder-1/2 Tsp

Salt-as Needed

 

Ingredients for Seasoning:

 

Fenugreek-1/4 Tsp

Curry Leaves-as Needed

Oil-as Needed

Cloves-as Needed

Bay Leaf-as Needed

Fennel-1/4 Tsp

Cinnamon-as Needed

 

Ingredients for Grinding:

 

Fennel-1/4 Tsp

Cumin-1/4 Tsp

Pepper-1/4 Tsp

Raw Rice-1/4 Tsp

Garlic-1 Flake

Cloves-2

Fry the above ingredients without adding oil and grind them without adding water.

 

Procedure to make Chicken Curry:

 

1. Heat oil in a pan, add cinnamon, cloves, fenugreek, fennel, curry leaves and let to splutter. Then add chopped small onion and fry till get golden color. Then add tomato, ground ginger, garlic paste, turmeric powder and fry till the raw smell subsides.

2. Mix the coriander powder and chilly powder along with water. Then mix the masala together with chicken pieces and into boiling curry. Add 2 cups of water and stir well. Then add salt and allow medium flame to boil. Then add ground masala powder and let to boil. Tasty chicken curry is ready to taste.

 

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!