Home  |  அறுசுவை

செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinad Country Chicken Curry)

தேவையானவை :

 

நாட்டுக் கோழி கறி - ஒரு கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 2 

எண்ணை - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

உப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்

பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ - தாளிக்க

 

 

அரைக்க தேவையானவை :

 

சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு - 6 பெரிய பல்

இஞ்சி - 5 கிராம்

வர மிளகாய் - 15

சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்

மல்லி விதை - 2 1/2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்

கசகசா - 1 டீ ஸ்பூன்

 

 

செய்முறை:

 

1.முதலில் சிறிய துண்டங்களாக நறுக்கிய கோழிக் கறியை அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு பிசறி வைக்கவும்.சீரகம், சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸ்சியில் விழுதாக அரைக்கவும்.மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும்,தேங்காய் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.

2.வெங்காயத்தை இரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.இப்போது கோழிக் கறியை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவவும்.ஒரு வாணலியில்  எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும்.வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.பிறகு கோழிக்கறியை போட்டு 5 நிமிடம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.

3.மசாலா ஐந்து நிமிடம் வதக்கிய பின் நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் மற்றும் சோம்பு விழுது, உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.பின் மிளகாய், மல்லி கலவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.பின் தேங்காய் விழுது சேர்த்து மீண்டும் பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

Chettinad Country Chicken Curry

Ingredients for Chettinad Country Chicken Curry:

 

Country Chicken-1 Kg

Small Onion-100 g

Tomato-2

Oil-3 Tbsp

Curry Leaves-2 bunch

Salt-1 1/2 Tbsp

Cinnamon, cloves, Bay Leaf, Star Anise-for Tempering

 

Ingredients for grinding:

 

Fennel-1 Tbsp

Garlic-6 Flakes

Ginger-5 G

Dry Chilly-15

Cumin-1 Tbsp

Coriander Seeds-2 1/2 tbsp

Grated Coconut-3 Tbsp

Turmeric Powder-1 1/2 Tbsp

Poppy Seed-1 Tsp

 

Procedure to make Chettinad Country Chicken Curry:

 

1. Mix the chopped chicken pieces together with 1/2 table spoon of  turmeric powder. Grind cumin, fennel, 1 table spoon of turmeric powder, ginger and garlic. Grind coriander and chilly separately. Grind grated coconut and poppy seed separately.

2. Cut the tomatoes in to 2 and onion in to 4 pieces. Wash and clean the chicken pieces gently. Heat oil in a pan, add the seasoning ingredients and let to splutter. Then add curry leaves, onion and sauté well. Then add chicken and fry for 5 minutes and then add tomato.

3. After 5 minutes, add 4 cup of water, turmeric powder, fennel, salt and allow 10 minutes for boil. Then add chilly and coriander paste and allow 10 minutes to boil. Then add coconut paste and let to boil for 10 minutes and then remove from flame.

  13 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!