Home  |  திரை உலகம்

சென்னையில் ஒரு நாள் - திரை விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் - இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிநடை போட்ட டிராபிக் என்னும் படத்தின் ரீமேக்காக இருந்தாலும், பொருத்தமான நடிகர்களால் தமிழிலும் வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறது.

படத்தில் லஞ்சம் வாங்கியதன் காரணமாய் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அரசியல்வாதியின் தய்வினால் மீண்டும் வேலைக்கு சேரும் ட்ராபிக் கான்ஸ்டபிள் சேரன், உடல் நலமில்லாத பெண்ணின் அப்பாவாய் தன்னை உணராமல், எப்போதும் சூப்பர் ஸ்டாராகவே தன்னை நினைத்துக் கொண்டு வளைய வரும் நடிகராய் பிரகாஷ்ராஜ், ராதிகா தம்பதியினர். பெற்ற மகனின் உறுப்புகளை தானம் கொடுத்துவிட்டு கதறும் டாக்டர் தம்பதியினராய்  ஜெயபிரகாஷ், லஷ்மி ராமகிருஷ்ணன். இக்கதைக்கு காரணமான கார்த்திக், அவனது நண்பன், காதலி. மனைவி தன் உயிர் நண்பனுடன் தனக்கு துரோகம் செய்துவிட்டதை சகிக்காமல் அவளை கார் ஏற்றி கொல்ல நினைத்து குற்றுயிரும் கொலையிருமாய் போட்டுவிட்டு, கார்த்திக்கின் இதயத்தோடு, சென்னை டூ வேலூர் 170 கிலோமீட்டர் ஒன்னரை மணி நேரத்தில் பிரயாணிக்க வேண்டிய கட்டாயத்தில் பயணப்படும் பிரசன்னா, இனியா.  இந்த பயணத்தை எந்த விதமான தடையும் இல்லாமல் வெற்றிகரமாய் முடிக்க பிரம்மப் பிரயத்தனப்படும் சிட்டி கமிஷனர் சரத்குமார் என இந்த பயணத்தை இச்சிறு சிறு கேரக்டர்கள் மூலம்  சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி ஜெயித்திருக்கிறார்கள்.

சரத்குமாரின் போலீஸ் நடிப்பு வழக்கம் போல,மிகச் சரியாய் பொருந்துகிறார். லஞ்சம் வாங்கி அவமானப்பட்டு மீண்டும் வேலைக்கு சேர்ந்த நேரத்தில் தானே வலிய வந்து தன் மேலிருக்கும் கறையை நீக்க இந்தத் பயணத்தை மேற்க் கொள்ளும் கேரக்டரில் சேரன். பிரசன்னாவை பொட்டல் காட்டில் விட்டுவிட்டு திரும்பும் காட்சியில் அதீத உருகலை தவிர்த்துவிட்டு பார்த்தால் நல்ல நடிப்பு.  டாக்டராக வரும் பிரசன்னா, இனியா தம்பதியினர். இனியாவின் துரோகம். ப்ரசன்னாவின் குற்ற உணர்ச்சி, அதனால்  பயணத்தில் ஏற்படும் குழப்பங்கள் என்று பிரசன்னாவும் அண்டர்ப்ளே செய்து அசத்தியிருக்கிறார். செல்ப் செண்டர் சூப்பர் ஸ்டார் நிலையிலேயே இருக்கும் பிரகாஷ்ராஜ் கேரக்டரில் ப்ரகாஷ்ராஜ் ஒரிஜினலாய் இருந்திருக்கிறார்.சாவின் முனையில் நிற்கும் இடத்திலும் தன்னைப் பற்றியும், தன் புகழ் பெருமையைப் பற்றியும் மட்டுமே யோசிக்கும் கேரக்டரில் ப்ரகாஷும், அவரது நிஜ நிலையை ஒரு கோபமான தருணத்தில் முகத்தில் அடித்தார்ப் போல சொல்லிவிட்டு செல்லும் ராதிகாவும் க்ளாஸ்.இக்கதையில் வரும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவில் ஷேனாட் ஜலாலின் கலக்கி இருக்கிறார். ஆக்சிடெண்ட் காட்சியில் படமாக்கப்பட்ட விதம் சூப்பர். மேஜோ ஜோசப்பின் இசையில் பாடல்கள் பெரிதாய் சொல்ல ஏதுமில்லாவிட்டாலும், பின்னணியிசையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கிறார். 

மொத்தத்தில் சென்னையில் ஒரு நாள் விரைவு ! நிறைவு !

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்