Home  |  நாட்டு நடப்பு

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை திரில் வெற்றி.... நேற்றைய போட்டி பற்றிய சுவாரசிய தகவல்கள் இதோ....

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை திரில் வெற்றி.... நேற்றைய போட்டி பற்றிய சுவாரசிய தகவல்கள் இதோ....

எட்டாவது ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் நேற்று சென்னை, டெல்லி அணிகள் மோதின.

இதில் சென்னை அணி டெல்லி அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்த போட்டி பற்றிய சின்ன ரீகேப்...


டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் டுமினி பீல்டிங் தேர்வு செய்தார்.சென்னை அணிக்கு வழக்கம் போல பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் ஜோடி துவக்கம் கொடுத்தது. இம்முறை டில்லி அணிக்காக களமிறங்கிய ஆல்பி மார்கல் வீசிய முதல் ஓவரில், ஸ்மித் 3 பவுண்டரிகள் விளாசினார்.

கூல்டர் நைல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மெக்கலம் அடுத்த பந்திலேயே அவுட்டானார்.

தற்போது புதிதாக கல்யாணமான ரெய்னா வந்த வேகத்தில் நான்கு ரன்னில் போல்டாகி வெளியேறினார். விக்கெட்டுகள் சரிந்தாலும் சென்னை அணி 6 ஓவரில் 59/2 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த ஸ்மித் (34), இம்ரான் தாகிர் சுழலில் நடையை கட்டினர்.

24 பந்தில் 32 ரன்கள் எடுத்த டுபிளசி அவுட்டான பின் சென்னை அணியின் ரன்வேகம் குறைந்து கொண்டே போனது. ஜடேஜா 18, பிராவோ 1 ரன்னுக்கு அவுட்டாக, சென்னை அணி 120 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

துவக்கத்தில் பந்துகளை வீணடித்த கேப்டன் தோனி (30), கடைசி ஓவரில் 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. மோகித் சர்மா (2), அஷ்வின் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.

151 என்ற எளிதான இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு நெஹ்ரா அதிர்ச்சி கொடுத்தார். இவரது இரண்டாவது ஓவரில் கவுதம் (4), அகர்வால் (15) என, இருவரும் அவுட்டாகினர். தொடர்ந்து அசத்திய நெஹ்ரா, ஸ்ரேயாசையும் (7) அவுட்டாக்க, டில்லி அணி 39 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

கேதர் ஜாதவ் (20) ஏமாற்ற, ரூ. 16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங், 9 ரன்னில் அவுட்டாகி டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்தார். டுமினியும் (5), கூல்டர் நைல் (5). அமித் மிஸ்ரா (4) என, வரிசையாக அவுட்டாக சென்னை அணிக்கு வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

டில்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோ வீசிய இந்த ஓவரின் முதல் இரு பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் எடுத்தார் மார்கல். அடுத்த பந்தில் இம்ரான் தாகிர் (2) அவுட்டானார்.

அடுத்த பந்தில் 2 ரன் எடுக்க 'டென்ஷன்' அதிகரித்தது. கடைசி பந்தில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மார்கல், பவுண்டரி மட்டும் அடிக்க, சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து போராடி தோல்வியை தழுவியது. மார்கல் (73 ரன், 55 பந்து), ஜோசப் (0) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

துளித்துளியாய்.....

கடந்த 2008ல் முதல் ஐ.பி.எல்., தொடர் துவங்கியது. அப்போது முதல் தற்போதைய எட்டாவது தொடர் வரை சென்னை அணிக்கு தோனி தொடர்ந்து கேப்டனாக உள்ளார். மற்ற எந்த அணிக்கும் ஒரே கேப்டன் தொடர்ந்து இருந்தது கிடையாது.
 
நேற்று டில்லி வீரர் மார்னே மார்கல் வீசிய முதல் ஓவரில் ஸ்மித்தின் 3 பவுண்டரி உட்பட மொத்தம் 16 ரன்கள் எடுத்தது சென்னை அணி. ஐ.பி.எல்., வரலாற்றில் சென்னை அணி முதல் ஓவரில் இவ்வளவு ரன்கள் எடுத்தது இது தான் முதன் முறை.
 
நேற்று 268வது போட்டியில் களமிறங்கிய ஆல்பி மார்கல் (டில்லி). உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அதிக 'டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தில் மும்பை வீரர் போலார்டு (267) உள்ளார்.
 
நேற்று அகர்வாலை கேட்ச் செய்த தோனி, ஐ.பி.எல்., அரங்கில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில், கில்கிறிஸ்ட் சாதனையை (67) சமன் செய்தார்.25ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணி வீரர் ஆஷிஷ் நெகரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?