Home  |  அறுசுவை

கோங்குரா சட்னி (Gongura Chutney)

தேவையானவை :

 

புளிச்ச கீரை - ஒரு கட்டு

தனியா  - ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு

பூண்டு - 15 பல்

பெருங்காயம் - சிறிதளவு

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு கப்

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

வெந்தயம் - கால் டீஸ்பூன்

 

செய்முறை :

 

1.வெறும் வாணலியில் வெந்தயம் மற்றும் தனியாவை வறுத்தெடுக்கவும்.புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காய வைக்கவும். புளியை கழுவி விட்டு சிறிதளவு சுடு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும். 

 

2.புளிக்கரைசல் மற்றும் 10 பல் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும். வெந்தயம் மற்றும் தனியாவை கரகரப்பாக பொடித்து வைக்கவும்.அரை கப் எண்ணெயில் கீரையை நன்றாக வதக்கவும். கீரையில் உள்ள நீர் போய் நன்றாக வற்றும் வரை வதக்கவும்.மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், மீதமுள்ள பூண்டு (பொடியாக நறுக்கியது), பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து வதக்கி வைத்துள்ள கீரையில் கொட்டவும்.

 

3.எண்ணெய் சூடாக இருக்கும் போதே அரைத்து வைத்துள்ள பொடி, மிளகாய் தூள், உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும்.நன்றாக கிளறினால் சுவையான கோங்குரா ரெடி.

Gongura Chutney

Ingredients for Gongura Chutney:

 

Gongura- 1 Bunch

Coriander-1 Tbsp

Mustard-1 Tsp

Cumin-1 Tsp

Tamarind-Small Lemon Size

Garlic-15 Flakes

Asafoetida-Little

Turmeric Powder-1/4 Tsp

Salt-as Needed

Oil-1 Cup

Chilly Powder-1 Tsp

Dry Chilly-2

Fenugreek-1/4 Tsp

 

Procedure to make Gongura Chutney:

 

1. Heat a pan, add fenugreek and coriander and fry them. Wash the gongura leaves, chop well and allow to pat dry. Wash the tamarind and soak in hot water.

2. Grind the tamarind juice along with 10 flakes of garlic. Grind the fenugreek and coriander into a coarse powder. Fry the gongura leaves in 1/2 cup of oil till water get dry. In remaining oil, add mustard, cumin, remaining chopped garlic, asafoetida, turmeric powder, dry chilly and season them and put in to gongura leaves.

3. Add the grinded powder, chilly powder, salt and tamarind. Stir well. Tasty gongura chutney is ready. 

 

 

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!