Home  |  திரை உலகம்

நீண்ட இடைவெளிக்கு பிறக்கு சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் சண்டமாருதம் !!

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சரத்குமார் சண்டமாருதம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.


இந்த படத்தின் கதையை சரத்குமார் எழுதியுள்ளார். திரைக்கதை வசனத்தை ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார்.


சரத்குமாருடன் ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, கன்னட நடிகர் அருண்சாகர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். 


இந்த படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.


இந்த படம் குறித்து அதன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறியதாவது, 


புயல், சூறாவளியை தாண்டி அசுரவேகத்தில் வீசும் காற்றை சண்டமாருதம் என்று குறிப்பிடுவார்கள். 


படத்தில் சரத்குமாருக்கு அப்படி ஒரு கேரக்டர். வில்லன் கேரக்டரும் படு பயங்கரமாக இருக்கும். பக்கா ஆக்ஷன் படம்தான். 


ஆனால் இதுவரை யாரும் சொல்லப்படாத கதை களத்தில் சொல்லப்படாத கதையை சொல்லப்போகிறோம். 


"எதிரியை பார்த்து பழக்கமில்லை எரிச்சுதான் பழக்கம்" என்பது வில்லன் சரத்குமாரின் பாலிசி. 


"எதிரியை எரிப்பது மட்டுமல்ல சாம்பாலாக்கித்தான் பழக்கம்" என்பது ஹீரோ சரத்குமாரின் பாலிசி. 


இவர்கள் இருவரின் மோதல்தான் சண்டமாருதம். என்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்