Home  |  திரை உலகம்

சந்தமாமா (Chandamama )

சந்தமாமா (Chandamama )

Movie Name: Chandamama சந்தமாமா
Hero: KARUNAS
Heroine: Swetha Basu
Year: 2013
Movie Director: Radhakrishnan
Music By: SRIKANTH DEVA


ஒரு எழுத்தாளராக பலர் பாராட்டப்பட வேண்டும் என்ற ஆசையுள்ள கருணாஸ், "சந்தமாமா " என்ற பெயரில் எழுதி தானே அதனை அச்சிட்டு, வெளியிட்டு, விளம்பரம் , விற்பனையும் செய்கிறார். அப்படியும் ஒண்ணுமில்லை. தான் சந்திக்கும் ஹீரோயின் ஸ்வேதாபாசு மூலமாகவும் புத்தகங்களை விற்க முயல்கிறார். குப்பை என்று அவர் பெரிதும் மதிக்கும் ஜெ.காந்தன் என்னும் எழுத்தாளர் சொல்ல, இனி அனுபவ ரீதியாக உணர்ந்து ஒரு காதல் கதையை எழுதி பெயரெடுக்கப் போவதாகச் சொல்கிறார். கருணாஸின் மனைவி ஸ்வேதாபாசுவை காதலிப்பதாக வரும் புவனை வைத்தே காதலை தொடர்கதையாகவும் புத்தகத்தில் எழுதி பெயரெடுக்கிறார். இறுதியில் மனைவியின் காதல் என்ன ஆனது? மிச்சக் கதை.

கருணாஸின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றும் காட்சி டு ஜெ.காந்தன் போலீஸ் ஸ்டேஷனில் புத்தகத்தைப் படித்துவிட்டு கோபப்படும் காட்சிகள்வரையிலும் படம் காமெடி. எப்படித்தான் கதையை முடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எற்படுத்தியிருக்கிறார் இயக்குநர். கருணாஸின் அப்பா சொல்லும் ரகசியம், இதனை ஹீரோயின் ஸ்வேதா சொல்லும் காட்சி, வாரப் பத்திரிகையின் அட்டையில் வரும் கதையின் இறுதி பாகத்தின் அறிவிப்பு , கருணாஸ் கடைசியில் என்ன ஆனார்... இவைகள்தான் படத்தின் டிவிஸ்ட்டுகள்.

ஹீரோயின் ஸ்வேதாபாசு. குழந்தைத்தனமான முகம். "யாரோ நீ"" பாடல் காட்சியில் அவ்வளவு க்யூட். புவனாக ஹரீஷ் கல்யாண் நல்ல நடிகர் என பெயர் எடுக்கலாம். ஆனந்தக்குட்டனின் ஒளிப்பதிவைப் பற்றி சொல்லவே தேவையில்லை, குறைந்தபட்ச வசதிகளுடனேயே இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார். ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் சுவை. பல முறை கருணாஸ் பற்றிய வசனத்தில் பதில் சொல்லிவிடுவதால் படத்தின் ஓட்டத்தில் அது தவறாகவே தெரியவில்லை. கிளைமாக்ஸில் என்ன ஆனது என்ற பதட்டத்தில் உண்மை தெரியும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.

பொழுதுபோக்கு படம்...பாக்கலாம்.

  19 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
வருங்கால முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
விஜய்யின் மெர்சல் டைட்டில் சொல்ல வருவது இதுதான், கவனித்தீர்களா?
விஜய்-61 பர்ஸ்ட் லுக் இப்படித்தான் இருக்குமாம், சூப்பர் தகவல்
விஜய்யை பற்றி இயக்குனர் அட்லி சொன்ன விஷயம் கோலிவுட் ஷாக்!
இத்தனை ஆயிரம் அடிக்கு போஸ்டரா? இந்தியாவிலேயே நம்பர் 1, தளபதி ரசிகர்கள் சாதனை
விழ விழ நான் எழுவேன்... 'விவேகம்' சர்வைவா.. சொல்வது என்ன ?
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை