பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
12ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே மாதம் 7ஆம் தேதி வெளியிடப்படும். அன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள் :
dge.tn.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
dge3.tin.nic.in
ஆகிய இணையதளங்களில் முடிவுகள் வெளியாகும். அதில், பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என பள்ளிகல்வி துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
|