Home  |  அறுசுவை

காரட் மசாலா இட்லி(Carrot idly masala)

தேவையானவை :

 

வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்

பச்சைக் கொத்தமல்லி - சிறிதளவு

காரட் (துருவியது) - 1/2 கப்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

கறிமசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

துருவிய சீஸ் - 1/4 கப்

கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

இட்லி மாவு - தேவைக்கேற்ப

 

செய்முறை :

 

1. வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பை தாளிக்கவும்.

 

2. தொடர்ந்து பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட் துருவல் சேர்த்து வதக்கவும்.

 

3. அத்துடன் மிளகாய் தூள், மசாலா தூள், துருவிய சீஸ் சேர்த்து பச்சைக் கொத்தமல்லி, உப்பு சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும்.

 

4. இட்லி தட்டில் குழியில் சிறிது மாவை ஊற்றி அதன் மேல் சிறிதளவு மசாலா கலவையை போட்டு அதற்கு மேல் இன்னும் சிறிதளவு இட்லி மாவு ஊற்றவும். இப்படியே எல்லாக் குழிகளிலும் இட்லி மாவு வார்க்கவும்.

 

4. வேக வைத்து எடுத்தால், ருசியான `ஸ்டப்டு இட்லி' ரெடி. தேங்காய்ச் சட்னி இந்த இட்லிக்கு ஏற்றது.

Carrot Idly Masala

INGREDIENTS :


Onion (Chopped) - 1 /2 Cup,

Fresh Coriander Leaves - Little,

Carrot (Shreded) - 1 /2 Cup,

Chilli Powder - 1 /2 Tsp,

Garam Masala - 1 /2 Tsp,

Shreded Cheese - 1 /4 Cup,

Idly Flour - as needed,

Salt and Oil - as needed.

For Seasoning :

Mustard and Urad dal - Little.


METHOD :


1. Heat Oil in a Frying Pan add mustards and Urad Dals for seasoning.

2. Add the finely chopped onions and shreded carrots and allow it to fry well in a medium flame.

3. Add Chilli powder, Garam masala powder, shreded cheese, fresh coriander leaves and salt along with them. And make it a masala mixture. 

4. Now coat the idly moulds with oil , pour the idly batter into idly moulds and place the carrot masala in the batter. Again pour some batter to cover the masala. Steam it and cook the idlies. 

Delicious Stuffed Idly is ready now. Serve it along Coconut Chutney. It gives morre taste.

  06 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!