Home  |  அறுசுவை

காரமல் கேக் (Caramel Cake)

காரமல் கேக் (Caramel Cake)

தேவையானவை :

 

கோதுமை மாவு - 170 கிராம்

வெண்ணெய் - 115 கிராம்

பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன்

ஜாம் - 30 கிராம்

பால் - ஒரு டீஸ்பூன்

பொடித்த சர்க்கரை - 115 கிராம்

பெரிய முட்டை - 2

 

 

காரமல் செய்வதற்கு தேவையானவை :

 

தண்ணீர் - 50 மில்லி

சர்க்கரை - 50 கிராம்

 

 

காரமல் செய்முறை:

 

1.ஒரு பாத்திரத்தில் சர்க்கரை 50 கிராம் எடுத்து போட்டு அடுப்பின் மேல் வைத்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்து பழுப்பு நிறமாகும்போது .தண்ணீரை விட்டு  5 நிமிடம் வரை கொதிக்க விடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கவும். 

 

காரமல் கேக் செய்யும் முறை:

 

1.முட்டையின் வெள்ளையையும், மஞ்சள் கருவையும் தனித்தனியாகப் பிரிக்கவும். இரண்டையும் தனித்தனியாக நன்றாக அடிக்கவும்.பொடித்த சர்க்கரை, வெண்ணையை இலேசாக ஆகும் வரை நன்றாக குழைக்கவும்.மாவையும் பேகிங் பவுடரையும் இருமுறை சலிக்கவும். குழைத்த வெண்ணை கலவையில் அடித்த மஞ்சள் கருவை சேர்த்து அடிக்கவும். காரமல் சேர்க்கவும். பிறகு சலித்த மாவை சேர்க்கவும்.

 

2.அதனுடன் அடித்த முட்டை வெள்ளை கருவை போட்டு மிருதுவாகவும் மெதுவாகவும் கலக்கவும். தேவையானால் பால் விடவும். ஏழு அங்குல கேக் பேக் செய்யும் இரண்டு தட்டுகள் எடுத்து அதில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.கலவையை அதில் போடவும். 375 டிகிரி F சூட்டில் 40 நிமிடம் வரை பேக் செய்யவும். முட்டை வெள்ளையை அடிக்கும் பொழுது பீங்கான் பாத்திரம் உபயோகிக்கவும். பாத்திரத்திலோ முட்டை அடிக்கும் கருவியிலோ எண்ணெய் பசை இருக்கக் கூடாது. கேக் பேக் ஆனவுடன் எடுத்து ஆற வைக்கவும். ஒரு கேக்கின் மேல் 30 கிராம் ஜாம் தடவி மற்றொரு கேக்கையும் அதன் மேல் வைக்கவும்.

Caramel Cake

Ingredients for Caramel Cake : 


Wheat Flour - 170 g,

Butter - 115 g,

Baking Powder - 2 Tsp,

Jam - 30 g,

Milk - 1 Tsp,

Powdered Sugar - 115 g,

Egg - 2.


Ingredients for Caramel :


Water - 50 ml,

Sugar - 50 g.


Method to make Caramel :


1. Keep a Pan on the Stove then add sugar heat it till it turns golden color then add water and allow it to boil for 5 minutes. Turn off the stove.


Method to make Caramel Cake :


1. Seperate the egg white layer and egg yolk. Keep it aside. Then blend it deeply. Then mix up the powdered sugar and butter. Seive the maida and baking powder for 2 times. Mix up the blended egg yolk and butter. Then add caramel along with it. Then add seived flour. 


2. Then add egg layer along with them. Stir it well. Add milk to make soft dough. Take a two 7 inch cake bake trays , apply ghee on it. Pour the flour into it. Add the mixture along with them. Filled it neatly. Keep the oven under 375 degree of heat for 40 minutes. After it cooked let it to be cooled. Then apply 30 g jam on it.


Tasty Caramel Cake is ready to eat.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!