Home  |  திரை உலகம்

ஒரே பைக்கில் விஜயும், அஜீத்துமா .............

விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்து வரும் படம் "வாலு". இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.


நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட  முடியும் தருவாயில் உள்ளதாம். இதனிடையே படத்தின் ஆடியோ காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது- ஆனால், படத்தின் ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட்டு சிம்பு ஏமாற்றிவிட்டார்.


சமீபத்தில் படத்திற்கான ஒரு காட்சி சென்னை தி.நகரில் உள்ள அக்கார்ட் என்ற ஓட்டலில் படமாக்கப்பட்டது. சிம்புவும் சந்தானமும் பைக்கில் வருவது போன்றும், அதில் சிம்பு அஜித்தின் முகமூடியையும், சந்தானம் விஜய்யின் முகமூடியையும் அணிந்து வந்தனர். அஜித்தும் விஜய்யும் ஒரே பைக்கில் வருவதை பார்த்து அந்த ஒட்டலில் இருந்தவர்கள் ஆச்சரியப்படுவது போன்றும் அதன்பின்னர் அவர்கள் முகமூடியை கழட்டி அவர்களை கேலி செய்வது போன்றும் காட்சிகள் எடுக்கப்பட்டன. இது சிம்புவின் ஐடியாதானாம்.


திரையரங்கில் இந்த காட்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று சிம்பு நம்புகிறார். மேலும் விஜய்யும் அஜித்தும் இனிமேல் திரையில் சேர்ந்து நடிப்பது என்பது முடியாத காரியம் என்றும் நாமே இதுபோல் ஏதாவது காட்சிகள் எடுத்து அவர்களை இணைத்துவைத்தால்தான் உண்டு என்றும் நகைச்சுவையுடன் சிம்பு கூறினாராம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்