Home  |  திரை உலகம்

பர்மா (Burma)

பர்மா (Burma)

Movie Name: Burma பர்மா
Hero: Michael Thangadurai
Heroine: RESHMI MENON
Year: 2014
Movie Director: Dharanidharan
Movie Producer: Square Stone Films
Music By: SURYA


கடன் வாங்கி கார் வாங்கியவர்கள், வாங்கிய பணத்தை திரும்ப கட்டமுடியாமல் போகும் நிலையில், அவர்களுடைய காரை பறிமுதல் செய்து, கடன் கொடுத்தவரிடம் ஒப்படைக்கும் பணியை (கார் சீசிங்) செய்து வருகிறார் கோத்ரா சேட்டு (அதுல் குல்கர்னி). இவரிடம் உதவியாளாக இருந்து வருகிறார் குணா (சம்பத்). குணாவிடம் பர்மா (மைக்கேல்) மற்றும் பூமர் (கார்த்திக் சபேஸ்) இருவரும் வேலை பார்க்கிறார்கள். சேட்டு சொல்லும் வேலையை குணா, தனது உதவியாளர்களான பர்மா மற்றும் பூமரிடம் ஒப்படைக்கிறார். அவர்களும் குணா சொன்ன வேலையை செய்து முடிக்கிறார்கள். இதனால் குணாவுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. ஆனால், குணாவோ பர்மா மற்றும் பூமருக்கு குறைந்த ஊதியமே கொடுக்கிறார். இதனால் கோபமடைந்த பர்மாவும், பூமரும் குணாவை பலிவாங்க அவனை போலீசில் மாட்டிவிடுகின்றனர். போலீசும் குணாவை கைது செய்து சிறையில் அடைக்கிறது. இதற்கிடையில், பர்மாவும் கல்பனா(ரேஷ்மி மேனன்)வும் ஒருவரையொருவர் காதலித்து வருகின்றனர். இவர்களுடைய காதல் கல்பனாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவளை கண்டிக்கின்றனர்.

ஆனால், பர்மாவைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று சொல்லி, வீட்டை விட்டு வெளியேறி பர்மாவுடனேயே தங்குகிறாள் கல்பனா. குணா ஜெயிலுக்கு சென்றுவிட்ட நிலையில், சேட்டுவிடம் நேரிடையாக பணியை வாங்கி செய்து வருகின்றனர் பர்மாவும், பூமரும். ஒருநாள் இவர்களுக்கு 28 காரை பறிமுதல் செய்யவேண்டும் என்ற பணி வருகிறது. இந்த பணியை பூமர், பர்மா, கல்பனா மூன்று பேரும் இணைந்து செய்கின்றனர். 27 கார்களை பறிமுதல் செய்துவிட்ட நிலையில், 28-வது காரை பறிமுதல் செய்துவிட்டு திரும்பி வருகின்றனர். அப்போது, கொள்ளைக் கும்பல் ஒன்று வங்கியில் பணத்தை திருடிக்கொண்டு வந்து, இவர்கள் பறிமுதல் செய்த காரில் ஏறி தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

சேட்டுவிடம் சென்று மூவரும் இதுபற்றி முறையிடுகிறார்கள். சேட்டுவோ, நாயகி கல்பனாவை பிடித்து வைத்துக் கொண்டு, காரை திரும்பக் கொண்டு வந்தால்தான் அவளை உயிரோடு விடுவேன் என்று இருவரையும் மிரட்டுகிறான். இதையடுத்து, பர்மாவும், பூமரும் காரைத் தேடி அலைகின்றனர். அப்போது, இவர்களுக்கு மாறன் (மது ரகுராம்) என்பவரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர், தன்னை போலீஸ் என்று இவர்களிடம் அறிமுகம் செய்து கொள்கிறார். மேலும், அந்த கார் எங்கிருக்கிறது என்பது தனக்கு தெரியும் என்றும், அந்த காரை பறிமுதல் செய்தால், அந்த காரில் இருக்கும் பணத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு காரை அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறான். இதற்கிடையில், பர்மா-பூமரால் பழிவாங்கப்பட்ட குணா சிறையில் இருந்து வெளியே வந்து இவர்களை பழிதீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இறுதியில் பர்மாவும் பூமரும் திருடுபோன காரை மீட்டு கல்பனாவை மீட்டார்களா? குணா, பர்மாவையும் பூமரையும் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
நாளை மெர்சல் இசை வெளியீடு... விஜய் பேசப் போகும் அரசியல் என்ன?
'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை