Home  |  திரை உலகம்

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை லாரன் ஜே இர்வின் !!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் தான் லிங்கா. 


இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர். இந்த நிலையில் மேலும் ஒரு ஜோடியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி, புகைப்படங்களாக தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் வெளிநாட்டில் படித்த எஞ்ஜினியராக ஒரு பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்தியா விடுதலையடைவதற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையில் ரஜினி, லாரன் இர்வின், சோனாக்ஷி நடிக்கிறார்கள். 


கடந்த வாரம் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மைசூர் வந்தார் லாரன். அவர் பங்கேற்கும் காட்சிகள் முடிந்ததும், "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவம். ரவிக்குமார் மாதிரி இயக்குநர் ஒரு ஆச்சர்யம்," எனப் புகழ்ந்தார்.


அத்துடன் கடந்த வாரம் வெளியான ரஜினியின் கோச்சடையான் படத்தையும் பார்த்துப் பாராட்டியுள்ளாராம். 


லாரன் இர்வின், பிரிட்டிஷ் படம் ஹார்ட், ஹாலிவுட் படம் வகரி, லண்டனின் புகழ்பெற்ற நாடகங்கள் வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்