கத்திரிக்கா நல்ல கத்திரிக்கா காம்பு நீண்ட கத்திரிக்கா புத்தம் புது கத்திரிக்கா புதுச்சேரி கத்திரிக்கா நாராயணன் தோட்டத்துல நட்டுவச்ச கத்திரிக்கா பறிச்சு நீயும் கொண்டு வா கூட்டு பண்ணி தின்னலாம்
கத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் திறனுடையது. இது காய்ச்சலைப் குணபடுத்தும். சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது.
இதில் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை இதற்கு உள்ளது. இரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. நம் கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது.
மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் பலம் உள்ளது. ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, மனித உறுப்புகளைத் தூண்ட வல்லது.
கொழுப்பை குறைத்து உடம்பை மெலிதாக்கும் தன்மை கொண்டது.வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.
|