Home  |  திரை உலகம்

பிரம்மன் - திரை விமர்சனம் !!

இன்றைய சூழ்நிலையில், பழைய படங்கள் மட்டுமே ஓடும் தியேட்டரை நடத்துவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை நகைச்சுவையாக காட்டுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.


சிறுவயது முதலே அந்த தியேட்டர் மேல் இருக்கும் பிரியத்தால், லீசுக்கு எடுத்து நஷ்டத்துடன் நடத்துகிறார் ஹீரோ சசிகுமார். நம்ம ஹீரோவுக்கு காதல விட தியேட்டர் தான் பெருசுனா பாத்துக்கோங்களேன். 


ஹீரோ கூடவே ஆப்பரேட்டர் கம் நண்பனாக சந்தானம் வருவதால் முதல்பாதி ஜாலியாகவே நகர்கிறது. சசி காதலில் விழுவதும், ஹீரோயினின் அண்ணனுக்கே சசியின் தங்கை வாழ்க்கைப்பட, பணத்தைத் தவிர காதலுக்கு வேறு பிரச்சினை குறுக்கே இல்லை என்றும் ஆகிறது. முதல் பாதி தியேட்டர் செண்டுமெண்ட், காதல் கலாட்டாக்கள், சந்தானம் காமெடி என சூப்பராக போகிறது.


சென்னைக்கு நண்பனைத் தேடி சசி போக, சூரியின் அலப்பறையுடன் இரண்டாம் பாதி ஆரம்பிக்கிறது. 


நண்பனைத் தேடிப் போன இடத்தில் தற்செயலாக டைரக்டர் ஆகும் சான்ஸ் இவருக்கே கிடைப்பதும், அப்புறம் அவசர அவசரமாக சினிமாவைக் கற்றுக்கொண்டு இவர் படத்திற்கு பூஜை போடும் நேரத்தில் நண்பனுக்காக அந்த சான்சையும், கதையையும் விட்டுக்கொடுக்க, அடுத்து நண்பனுக்காக காதலை விட்டுக்கொடுக்க, அதனால் படம் சற்று தொய்கிறது. 


தியேட்டர், காதல் பிரச்சினையே போதுமானதாக இருக்கும்போது, நட்பைக் கொண்டுவந்து, அதன் செண்டிமெண்ட்டை சாறு பிழிந்து, ‘நட்புன்னா....’ன்னு வழக்கமான சசி பட டயலாக்குகளைப் பேசி, எங்கெங்கோ அலை பாய்ந்திருக்கிறார்கள். நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது, பார்த்தால் அது ஹீரோயின்(இன்னும் எத்தனை படத்துல இந்த மாதிரி சீன்களை காட்டப் போறீங்க பாஸ்). அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு ஏழு வயசு குழந்தைக்கு கூட தெரியும்..........


இதாங்க படத்தோடு கத........


படத்தின் ப்ளஸ் பாயின்டே இன்றைய தியேட்டர்களின் நிலைமையையும் தியேட்டருக்கும் சசிக்குமான பிணைப்பையும் அழகாகச் சொல்வதுதான். ஆனா அப்ப அப்ப கொஞ்சம் லாஜிக் மிஸ் ஆவுது பாஸ்..... இரண்டாம் பாதியில் இன்றைய சினிமாவின் நிலையையும் உதவி இயக்குனர் சூரி போர்சனில் ஜாலியாக சொல்லி இருப்பது மேலும் சிறப்பு.


கிராமத்து பாணியில் நடித்து வந்த நம்ம சசிகுமாருக்கு, டவுன் கெட்டப் பரவால.... எல்லப் படத்தை மாறி இந்த படத்திலேயும் சசி துருதுருவென வருகிறார். வீட்டில் திட்டு வாங்கும் உருப்படாத பையனாக, காதலியை விரட்டி விரட்டி காதலிப்பவராக, சந்தானத்திற்கும் ஈடு கொடுப்பவராக சசி எப்போதும்போல், அவர் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்.


இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும், லாவண்யா, நடிப்பில் ஓகே தான். பட் ஏதோ மிஸ்சிங்......


முதல் பகுதியின் முக்கிய பகுதியே சந்தானம் தான். இரண்டாம்பாதியில் கதை சென்னைக்கு நகர்ந்துவிட, இவரும் தியேட்டரை பொறுப்புடன் நடத்தும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஆகிவிடுகிறார். 


சினிமாவில் சான்ஸ் தேடுபவராக வரும் சூரி, சினிமாவில் உள்ள சில பந்தா பரமசிவன்களை நன்றாகவே ஓட்டி இருக்கிறார்கள்.


பாடல்கள் பரவாயில்லை....


மொத்தத்தில் பிரம்மன் சென்டிமென்ட் + காதல் + காமெடி !!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்