Home  |  ஆரோக்கியம்

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவும் - ஆயுர்வேத முறை !

மூளை காய்ச்சலால் ஏற்படூம் மூளை பதிப்பு முதுகுத் தண்டுவடத்தின் உள்ளே அமைந்துள்ள ஸ்பின்ல் கரோ பகுதியையும் பாதிக்கிறது. நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்துள்ள இந்தப் பகுதிகளில் ஏற்படும் எந்தப் பாதிப்பும் நரம்புகளின் கட்டுப்பாட்டைச் செயலிழக்கச் செய்கின்றன. அவ்வாறு நிகழும்போது உடல் சோர்ந்து கை கால் பகுதிகளில் தள்ளாட்டத்தை ஏற்படுத்துகின்றன. காய்ச்சல் விட்டுவிடும். ஆனால் அது ஏற்படுத்தும் இந்தப் பாதிப்பு மிகவும் கடுமையானது.இளங்குழந்தைப் பருவத்தில்தான் மனிதனுக்கு புத்தி சக்தியானது வேகமாய் வளருகிறது.எனவே குழந்தை பருவத்தில் நாம் செய்யும் மருத்துவம் அவர்களுக்கு புத்தி வளர்ச்சியை மேலும் வலுபடுத்தும்.குழந்தைகளின் மூளை வளர்ச்சி பெற சில மருத்துவ குறிப்புகள்,

           சொக்கத்தங்கக் கட்டியைச் சிறிது தாய்ப்பால் சேர்த்து சுத்தமான அம்மியில் அரைத்து அதனுடன் பசு நெய்யும் தேனும் சில துளிகள் சேர்த்து நன்றாய்க் கலந்து குழந்தைக்குக் கொடுக்கவும். அம்மா கிழக்கு முகமாய் உட்கார்ந்து குழந்தையை வடக்கு பக்கமாய் தலையிருக்கும்படி மடியில் படுக்க வைத்து ஊட்டுவது சம்பிரதாயம். இது குழந்தையின் புத்திக்கும் உடலுக்கும் வலிவூட்டும். நல்ல நிறத்தைத் தரும்.


           பிராம்ஹீ, வல்லாரை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், வசம்பு, சதகுப்பை, தண்ணீர்விட்டான் கிழங்கு, தந்தீமூலம், நாகபலா வேர், சிவதை வேர் இவை யாவும் அறிவாற்றலையும், நல்ல நினைவாற்றலையும் வளர்க்கும் மூலிகைகள். இம்மருந்துகளில் பலதும் சேரும் சாரஸ்வத சூர்ணம் ¼ ஸ்பூன் , பிராம்ஹீகிருதம்  ½ ஸ்பூன், தேன் ¼ ஸ்பூன் ஆகியவற்றைக் குழைத்து ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று தடவை நாக்கில் தடவிவிடவும். இது மூளைப் பகுதிக்கு நல்ல பலத்தைத் தரும்.

           பிராம்ஹீ, வெண்கடுகு, வெண்கோஷ்டம், இந்துப்பு, நன்னாரிவேர்ப்பட்டை, வசம்பு, திப்பிலி இவற்றால் தயாரித்த பசு நெய்க்கு அபயகிருதம் என்று பெயர். மூளையைச் சார்ந்த நரம்புகள் வலுப்பட இது மிகவும் நல்ல மருந்தாகும். இரவில் குழந்தை தூங்குவதற்கு முன்பாக சிறிய அளவில் கொடுக்கலாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!