Home  |  திரை உலகம்

பிரியாணி ( Biriyani )

பிரியாணி ( Biriyani )

Movie Name: Biriyani பிரியாணி
Hero: KARTHI
Heroine: HANSIKA MOTWANI
Year: 2013
Movie Director: VENKAT PRABHU
Movie Producer: STUDIO GREEN
Music By: YUVAN SHANKAR RAJA

போலீஸ் துரத்த, சுகனும் (கார்த்தி) பரசுவும் (பிரேம்ஜி) காரில் பறக்கும் காட்சியில் தொடங்குகிறது , இருவரும் இங்கே வந்த கதையை விவரிக்கிறார் பரசு. சுகன் பிரியங்காவைக் (ஹன்ஸிகா) காதலித்தாலும் பார்க்கிற பெண்களிடமெல்லாம் ஜொள்ளு விடுகிறான். இருவரும் பணி நிமித்தமாக ஆம்பூர் போகிறார்கள். அங்கே இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான வரதராஜனைப் (நாசர்) பேட்டி எடுக்கும் வாய்ப்பு சுகனுக்கு கிடைக்கிறது. சுகனை வரதராஜனுக்குப் பிடித்துப்போகிறது.இதற்கிடையில், வரதராஜனுக்கு கிரானைட் மோசடியில் இருக்கும் தொடர்பைப் புலனாய்வு செய்ய சி.பி.ஐ. அதிகாரி சென்னைக்கு வருகிறார். அதே நேரத்தில் வரதராஜன் காணவில்லை என்ற தகவல் வருகிறது. வரதராஜனின் மருமகன் விஜய் கிருஷ்ணா (ராம்கி) போலீஸார் உதவியுடனும் , சி.பி.ஐ அதிகாரியும் சென்னையின் உள்ள தன் நண்பன் காவல்துறை அதிகாரி விக்ரமுடன் (பிரேம்) சேர்ந்து வரதராஜனைத் தேடுகிறார்கள்....சுகனும் பரசுவும் திரும்பிவரும் வழியில் ‘பிரியாணி’ சாப்பிடும் இடத்தில் மாயா (மாண்டி தக்கர்) என்னும் பெண்னால் கவரப்பட்டு அவள் பின்னால் போகிறார்கள். அது அவர்களை வரதராஜன் கொலையில் சிக்கவைக்கிறது. அதிலிருந்து எப்படித் தப்பினார்கள் என்பதே மீதிக்கதை.

சுகனும் பரசுவும் அடிக்கும் ஜொள்ளு லூட்டிகள் எரிச்சலும் அலுப்பும் ஊட்டுகின்றன. பிணத்தைப் பல நாட்கள் வைத்துக்கொண்டு அலைவது படு மோசம். மெமரி சிப் ஒன்றை சி.பி.ஐ அதிகாரியிடம் கொடுத்தனுப்புகிறான் சுகன். அவர்தான் தன்னைத் தேடுகிறார் என்பது அவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற விளக்கம் இல்லை. போலீஸாக வந்து வில்லனாக மாறும் உமா ரியாஸ்கான் திருப்பம் மட்டும் தேறுகிறது. நண்பனுக்கு ஒரு பிரச்சினை என்றதும் விட்டுவிட்டுப் போக மாட்டோம் என்று நண்பர்கள் சேர்ந்துகொள்ளும் காட்சி பல படங்களை நினைவுபடுத்தினாலும், நெகிழ்ச்சி. தன்னுடைய அக்காவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று தவிக்கும் காட்சிகளில் கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். அழகு ஹன்ஸிகாவுக்கு இரண்டாம் பகுதியில் கொஞ்சம் சீரியசான பாத்திரம்.யுவன் சங்கர் ராஜாவின் பின்னனி இசை படத்திற்கு இதம் சேர்த்திருக்கிறது. எடிட்டர்கள் பிரவின், ஸ்ரீகாந்த் இருவருக்கும் பாராட்டுகள்.

லெக் பீஸ் மட்டும் OK.....குஸ்கா .....சாப்பிடவே முடிலே.

 

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?
ஒரு பக்கம் காவி, மறு பக்கம் சூரியன் – நெருக்கடியில் தளபதி நடிகர்…!
'தளபதி' டைட்டிலுக்கு பின்னால் இவ்வளவு பெரிய பழிவாங்கலா? கோலிவுட் ஆச்சரியம்
விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்
விஜய்யின் மெர்சல் படத்திற்கு கிடைத்த புதிய தலைப்பு- மாஸ் டிரண்ட் செய்த ரசிகர்கள்
எனக்கு செட் ஆகாத ஹீரோயின் இவர்தான்...! விஜய் சொன்னது