Home  |  திரை உலகம்

பிரியாணி - திரை விமர்சனம் !!

நடிகர் : கார்த்தி

 

நடிகை : ஹன்சிகா மோத்வானி

 

இயக்கம் : வெங்கட் பிரபு

 

இசை : யுவன் சங்கர் ராஜா

 

வெங்கட் பிரவின் மத்த படங்கள் மாதிரியே இந்த படமும் ஆரம்பிக்கும் போது குடி கூத்தாட்டத்தோடு ஆரம்பிக்கிறது. கண்ணில் சிக்குகிற பெண்களை எல்லாம் ரூட் விடும் பிளேபாய் ஹீரோவாக வரும் கார்த்தியும், இன்னும் கன்னிப் பையனாகவே இருக்கும் பிரேம்ஜியும் செய்யும் சில கூத்துகளோடு முதல் அரைமணி நேரம் நகர்கிறது. 

 

நாசர் வந்த பிறகு தான் கதை ஆரம்பிக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் முதல் அரைமணியிலேயே கதைக்குத் தேவையான முக்கியமான சம்பவங்கள் நடந்திருப்பதை இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் உடையும்போது தான் புரிகிறது. பிளே பாய் ஹீரோ என்று செய்திகளில் படித்தபோது ‘இது எங்க உருப்படப்போகுது’ என்று தான் நம் மனதில் தோன்றியது. ஆனால் ஏற்கனவே காதலியாக இருக்கும் ஹன்சிகாவிடம் நல்லபிள்ளை இமேஜை மெயிண்டெய்ன் செய்துகொண்டே கார்த்தி ஜொள்ளுவதும், மாட்டிக்கொண்டால் பிரேம்ஜி மேல் பழியைப் போடுவதுமாக ஜாலியாகவே சொல்லியிருக்கிறார்கள். மேலும் கதைக்கு அந்த பிளே பாய் கேரக்டர் தேவை என்பதால், போரடிக்க வில்லை!

 

இரண்டாம்பாதியில் போலீஸ் அதிகாரிகள் துரத்த, அக்காவையும் வில்லன் குரூப் கடத்திக்கொண்டு போய்விட, நாசரின் பிணத்துடன் கார்த்தி ஓடுவதால் படம் வேகமாகவே நகர்கிறது. எதிர்பாராத அந்த கிளைமாக்ஸ் சுவாரஸ்யம் அருமை. மங்காத்தா பாணியில் முதல்பாதி முழுக்க நமக்குத் தெரிந்தும், தெரியாமலும் முடிச்சுகள் விழுந்துகொண்டே இருப்பதால், கொஞ்சம் ஸ்லோவாகவே நகர்கிறது. போலீஸ் துரத்த ஆரம்பித்த பின்பே, படம் வேகம் எடுக்கிறது. அடுத்து உமா ரியாஸ் கேரக்டர் வந்ததும், செம ஸ்பீடில் போகிறது படம்.  பே கில்லர் வேடத்தில் ஆண்களையே பார்த்துச் சலித்த நமக்கு, உமா ரியாஸ் கேரக்டரும், கார்த்தியுடன் அவர் போடும் ஃபைட்டும் பெரிய மாறுதல். மௌன குரு படத்திற்குப் பிறகு இதில் உமா ரியாஸ்க்கு நல்ல ரோல். பின்னி இருக்கிறார்.

 

 

தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வந்த ஹீரோ கார்த்திக்கு, பிரியாணி பரவாயில்லை என்றே சொல்லலாம்.  வழக்கம்போல் நடிப்பிலும், காமெடியிலும், ஆக்சனிலும் கார்த்தி இந்தப் படத்தில் கலக்கியிருக்கிறார். ஆனால், இந்த டான்ஸ் தான் வர மாட்டேங்குது. 

 

கார்த்திக்கு ஜோடியாக வரும் ஹன்சிகா பற்றி சொல்ல நிறைய இருந்தாலும், பெரிதாகச் சொல்ல ஏதுமில்லை. பாடல்களுக்கு ஆடுவது, ஹீரோவுடன் காதல் கொள்வது, பின்பாதியில் ஹீரோவைக் காப்பாற்ற தன் மீடியா பவரை யூஸ் பண்ணுவது என கொடுத்த வேலையை கனகச்சிதமாக முடித்திருக்கிறார் ஹன்சிகா.

 

பிரேம்ஜியின் காமெடி பரவாயில்லை, கார்த்தி தான் செய்த தப்பையெல்லாம் பிரேம்ஜி செய்வதாக மாட்டிவிடுவதும், ஹன்சிகா பிரேம்ஜியை பின்னி எடுப்பதும் அருமை. பாத்ரூமில் ஒரு ஃபிகருடன் இருக்கும் கார்த்தியைக் காப்பாற்ற, அதே பாத்ரூமுக்குள் போக நினைக்கும் ஹன்சிகாவைத் தடுக்க இவர் பேசும் டயலாக்ஸ் செம.......

 

நாசரின் மருமகனாக ராம்கி வருகிறார். இவரும் நன்றாகவே நடித்திருக்கிறார். கார்த்தியுடன் ஃபைட் பண்ணும்போது, பழைய ராம்கியை பார்க்க முடிந்தது. 

 

யுவன் இசையில் பாடல்கள் கேட்க ஒரு மாதிரியாக இருந்தால், கட்சிகளில் பரவாயில்லை....

 

மொத்தத்தில் பிரியாணி கொஞ்சம் காமெடி, கொஞ்சம் விறுவிறுப்பு....... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்