Home  |  திரை உலகம்

சன்னி லியோனுடன் ஜாக்பெட்டில் ஜோடி சேரும் பரத் !

இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமாகிய பரத், தொடர்ந்து காதல்,பட்டியல், எம் மகன், பழனி, சேவல் போன்ற 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கில்லாடி, 555 ஆகிய படங்கள் வெளிவர இருகின்றன. இந்நிலையில் பரத்திற்கு ஜாக்பெட் என்ற இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் பற்றி நடிகர் பரத் கூறும் போது, ஒவ்வொரு தமிழ் நடிகர்களுக்கும் இந்திப் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சிலருக்கு கனவாக கூட இருக்கும். ஏனென்றால் இந்தி பட உலகம் அவ்வளவு பெரியது. இந்தியில் நடித்துவிட்டால் இப்போது உலகப் புகழ் கிடைத்து விடுகிறது. நான் இது பற்றி யோசிக்கவே இல்லை. நாமெல்லாம் எங்கே நடிக்க போகிறோம் என்று இருந்தேன். 


ஒரு நாள் எனக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.தாங்கள் '555' படத்தின் ஸ்டில்கள்,விளம்பரங்களை பார்த்ததாகவும் பிடித்து இருந்ததாகவும் உடனடியாக மும்பை வரமுடியுமா என்றும் கேட்டார்கள். மும்பை போனேன்.அவர்களுக்கு பிடித்து விட்டது. அதுதான் 'ஜாக்பாட்' படம் எனக்கு இந்த படவாய்ப்பே ஒரு ஜாக்பாட் வாய்ப்பு போலதான். இரண்டே நாளில் முடிவாகிவிட்டது. ஜாக்பாட் படத்தை தயாரிப்பது வைக்கிங் மீடியா என் டர்டெய்ன்மெண்ட் நிறுவனம். இயக்குவது கெய்சாத் குஸ்தாத். இவர் பாம்பே பாய்ஸ், பூம் போன்ற படங்களை இயக்கியவர். கத்ரினா கய்ப்பை அறிமுகம் செய்தவரே இவர்தான். படத்துக்கு ஒளிப்பதிவு ஆர்த்தர் சுராவ்ஸ்கி. இவர் போலந்துகாரர். ஹாலிவுட், ஈரானிய, கொரியன் படங்களில் பணியாற்றியவர்.இந்தப் படத்துக்கு 7 பேர் இசை அமைக்கிறார்கள். இது ஒரு காமெடி த்ரில்லர் படம். 


படத்தில் நான், சச்சின் ஜோஷி, நஸ்ருதீன் ஷா, சன்னி லியோன் நான்கு பேர் முக்கிய கதாபாத்திரங்கள் .எங்களைச் சுற்றித்தான் கதை நிகழும். நான்கு பேரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ஏமாற்றிக் கொள்ளை அடிப்போம். நான் பாண்டிசேரியிலிருந்து கோவா போய் தங்கிவிட்ட தமிழ்ப் பையனாக நடிக்கிறேன். அங்குள்ள கேஸினோ, எனப்படும் கேளிக்கை விடுதியில் வேலை பார்ப்பேன். இந்தக் கதை கோவா, மும்பை என இரண்டு நகரங்களிலும் நடக்கும். இதில் நடிக்கும் நடிகர்களில் இளையவன் நான்தான். இருந்தாலும் தமிழ் திரையுலகின் மீதுள்ள மரியாதையால் என்னை அன்பாக நடத்துகிறார்", என பரத் தெரிவித்தார்

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்