Home  |  ஆரோக்கியம்

அருகம் புல்லின் அற்புதமான பயன்கள் !!

தெய்வீக மூலிகையாகப் போற்றப்படும் அருகம்புல்லின் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்படும் படியாக உள்ளது. நவீன மருந்துகளால் தீர்க்க முடியாத குறிப்பிட்ட நோய்களைத் தீர்த்து நல்ல பலனைத் தருவது இதன் சிறப்பு. பலவிதமான இதய நோய்களையும், ரத்தக் குழாய் அடைப்பையும், ரத்த ஓட்டத் தடைகளையும், ரத்தக் குழாய் பலவீனத்தையும் அருகம்புல் மூலமே தீர்த்துவிட முடியும். 

அருகம்புல் எங்கும் பயிராக்க கூடியது. நீர்நிலை ஓரங்களிலும், தோட்டக் கால்களிலும் எப்பொழுதும் கிடைக்கும். அருகம் புல்லின் மருத்துவ பயன்கள் பின்வருமாறு, 


சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் அருகம் புல் முதலிடத்தை வகிக்கிறது. 


வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள்,கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு அருகம் புல் நல்லதொரு மருந்து. 


அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். 


இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம். சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். 


சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் தினமும் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.


ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உள்ளது. 


அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.


அருகம்புல் வேரையும், புல்லையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நான்கு டம்ளர் தண்ணீரில் போட்டு சிறிதளவு மிளகுத் தூளையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய கஷாயத்துடன் தேவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூடாக தினமும் காலை - மாலை இருவேளை உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். 


நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.


அருகம் புல் அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. 


நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.


அருகம் புல் 30 அரைத்துப் பாலில் கலந்து பருகி வர ரத்த மூலம் குணமாகும்.


அருகம் புல் வேர், நன்னாரி வேர், ஆவாரம் வேர்ப்பட்டை, குமரி வேர் என ஒவ்வொன்றையும் 50 கிராம் எடுத்துக்கொண்டு 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடிகட்டி 100 மி.லி வீதம் ஒரு நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மோகத்தால் உண்டான முகு தாகம் தணியும்.


அருகம்புல்லும், மஞ்சளும், பச்சைப் பயறும் சேர்த்து அரைத்து மேலுக்குப் பூசி, குளித்து வந்தால் தோல் நோய்கள் வராமல் பாதுகாத்து தோலின் பாதுகாவலனாகச் செயல்படும். உடலுக்கு நல்ல அழகைத் தரும். தேமல் நீங்கி விடும். தோலின் நிறம் மாறும்படியான தடிப்பு, சொறி, அலர்ஜியை நீக்கி விடும்.


அருகம்புல் சாற்றை தினசரி 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் புத்தி மந்தம் விலகும். அறிவு துலங்கும். புத்தி தெளிவடைந்து பிரகாசம் அடையச் செய்வதில் தன்னிகரற்ற மூலிகையாகும்.


அருகம்புல்லையும், ஆல இலையையும் சமமாக எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். தூதுவளை வேரையும் அருகம்புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும் வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுகள் மட்டுமே பிழிந்து விட்டால் வலி உடனே நீங்கும்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!