Home  |  நாட்டு நடப்பு

வாழ்க்கை கணக்கு கணித மேதை ஜான் நாஷ் !!

வாழ்க்கை கணக்கு கணித மேதை ஜான் நாஷ் !!

நோபெல் பரிசுபெற்ற அமெரிக்க கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார். "A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையை சித்தரித்து எடுக்கப்பட்டது.

 


ஜான் நாஷும் எண்பத்தி ஆறு வயதானவர் அவரும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 


Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட கணித மேதை ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான சிறந்த கணித மேதை எனும் நேபெல் பரிசை வென்றார்.

 


Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் கணித சூத்திரத்தில் ஜான் நாஷ் செய்துக்காட்டியிருக்கும் ஆழமான ஆய்வுப்பணியும் அதனால் கிடைத்திருக்கும் விளக்கங்களும் அவருக்குப்பின் பல தலைமுறைகளைச் சேர்ந்த கணிதவியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு சிறந்த ஒப்பற்ற வழிகாட்டியாக நின்று பயன்படும் என்று அவர் பணிபுரிந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 


புத்திசாலித்தனமான பகுத்தறிந்து முடிவெடுக்கவல்லவர்கள் தமக்கிடையிலான மோதலின்போதும் ஒத்துழைப்பின்போதும் செயற்படும் விதங்கள் மற்றும் எடுக்கும் முடிவுகளுக்குள் பொதிந்திருக்கும் கணித சூத்திர மாதிரிகளின் அடிப்படைகளை புரிந்துகொள்ள உதவும் அல்லது அவற்றை விளக்கும் கணித கணக்கீட்டு சூத்திரமே Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அந்த துறையின் பிதாமகராக ஜான் நாஷ் வர்ணிக்கப்படுகிறார்.

 


மனிதர்களை புரிந்து கொண்டு மனித உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு விடை காண நினைப்பவர்களுக்கு மன அழுத்த நோய்தான் வரும் என்பதை இவரின் வாழ்க்கை நமக்கு அழகாக எடுத்து காட்டுகிறது. இந்த கணக்கு மேதை ஏன் கண்டுபிடிக்க வில்லை தனக்கு வந்த மன அழுத்தத்திற்கு விடை. கண்டு பிடித்திருந்தால் நன்றாக இருக்கும்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?