Home  |  அறுசுவை

அவல் சர்க்கரைப் பொங்கல்

அவல் சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை :

அவல் - 1 கப்
பச்சைப் பயறு - 1/4 கப்
குங்குமப்பூ - சிறிது
வெல்லம் - 1 கப்
நெய் - 1/4 கப்
பால் - 1/2  கப்
ஏலக்காய் - 2
முந்திரி - 10
திராட்சை - 10


செய்முறை :


1.வாணலில் பச்சைப் பருப்பை பொன்னிறம் சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும்.

2.அதே வாணலில் அவலைப் போட்டு சூடேறும்வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.

3.பச்சைப் பயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

4.பருப்பு வெந்ததும் அதில் ஒரு கப் அவலுக்கு இரண்டு கப் பாலும், தண்ணீருமாகக் கலந்து ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும்.

5.கொதி வந்ததும் அவலைக்கொட்டிக் கட்டி வராமல் நன்றாகக் கிளறி மிகவும் குறைவானத் தீயில் மூடி வேகவைக்கவும்.

6.அவல் சீக்கிரமே வெந்துவிடும்.சிறிது சூடான பாலில் குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கி பொங்களில் சேர்த்துவிடவேண்டும்.

7.இதற்கிடையில் ஒரு கனமான பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி இளம் பாகு பதம் வந்ததும் பொங்கலில் கொட்டிக் கிளறி ஏலக்காய் தூவ வேண்டும் 

8.பிறகு ஒரு வாணலில் நெய் விட்டு முந்திரி,திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து இவற்றை நெய்யுடன் சேர்த்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்க வேண்டும் 

  28 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!