Home  |  கல்விச்சோலை

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு !!

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு !!

குரூப்-4 தேர்வு வினாக்களில் பொது அறிவியல் பாடத்திட்டத்தில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து குறைந்தபட்சம் 15 கேள்விகள் முதல் 20 கேள்விகள் வரை கேட்கப்படுவது முந்தை ஆண்டு வினாத்தாள்களை ஆய்வு செய்தால் தெரிய வரும்.

சில வருடங்கள் இயற்பியல், வேதியியலில் 10 கேள்விகளும், சில ஆண்டுகள் தாவரவியல், விலங்கியலில் 10 கேள்விகளும் கேட்கப்படுகின்றன. கேள்விகள் எல்லாம் அடிப்படை அறிவியலில் இருந்து கீழ்க்கண்டவாறு கேட்கப்படுவதை அறிய முடிகிறது.

இயற்பியல் - கண்டுபிடிப்புகள், சூரியன், சூரிய ஆற்றல், சூரிய கோள்கள், காந்தம், மின்சாரம், மின்அறிவியல், இயற்பியலின் அனைத்து அடிப்படை விதிகள், அவற்றின் செயல்பாடுகள் வேதியியல் - தனிமங்கள், அமிலம், காரம், பயிர்களுக்கான உரங்களின் வேதியியல் பெயர்கள், ஆக்சிஜனேசன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், சோடியம் கார்பனேட், பயோ-டீசல், யுரேனியம், பிளிச்சிங் ஏஜெண்ட், குளோரோபாம், தங்கம், வெள்ளி, காட்மீயம், இயற்கை வாயு தொடர்பான விவரங்கள் தாவரவியல் - தாவர செல்கள், கிளைக்காலஜிஸ், புரோட்டோ பிளாசம், உணவுப்பயிர்கள், தாவரப்பெயர்கள், தாவரங்களின் சுவாசம், ஒளிச்சேர்க்கை உயிரியல் - நாளமில்லா சுரப்பிகள், ரத்தங்கள், வைட்டமின்கள், டிஎன்ஏ, மனித உடல் உறுப்பு நோய்கள் விவரம், பாக்டீரியா, வைரஸ் நோய்கள்.

எனவே, தேர்வெழுதுவோர் 6-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பொது அறிவியல் புத்தகங்கள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக குறிப்புகள் எடுத்துப் படித்தால் அறிவியல் கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் அளித்து தேர்வில் வெற்றிபெறலாம்.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
TNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் !!
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை !!
மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் !!
ஆசிரியர் தகுதி தேர்வு - 2015
எம் பி பி எஸ் கட் ஆப் குறைவதால் சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் அதிர்ஷ்டம் !!
+2 தேர்வு முடிவுகள் !!
நாளை பிளஸ் டூ ரிசல்ட் !!
மெடிக்கல் சீட் - விண்ணப்பம் விற்பனை தொடங்கியது !!
வெளிநாடு செல்லும் மாணவர்களே உசார் !!
10 மற்றும் +2 ரிசல்ட் தேதி அறிவிப்பு !!