Home  |  அறுசுவை

அத்திக்காய் கூட்டு

அத்திக்காய் கூட்டு

தேவையானவை 

 

1. அத்திக்காய் - 200 கிராம் 

 

2. தேங்காய்த்துருவல், பாசிப்பருப்பு - தலா ஒரு கப் 

 

3. சீரகம் - ஒரு டீஸ்பூன் 

 

4. காய்ந்த மிளகாய் - ஓன்று 

 

5. மிளகு - 5

 

6. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 

 

7. உப்பு - தேவையான அளவு 

 

தாளிக்க 

 

1. கடுகு - அரை டீஸ்பூன் 

 

2. உளுந்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன் 

 

3. எண்ணெய் - ஒரு டீஸ்பூன் 

 

4. பெருங்காயத்தூள் - சிறிதளவு 

 

செய்முறை :

 

1. அத்திக்காயை பொடியாக நறுக்கி, எண்ணெய் விட்டு வதக்கவும்.

 

2. லேசாக வதக்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, குழைய வேகவைக்கவும்.

 

3. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.

 

4. பின்னர் அதை மிக்சியில் போட்டு தேங்காய்த்துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும் இந்த விழுதை வதக்கி வைத்துள்ள அத்திக்காயுடன் சேர்த்து, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.

 

5. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து கொட்டி, ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

 

6. இந்த கூட்டை சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் சாப்பிடலாம். 

  01 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!