Home  |  வேலைவாய்ப்பு

தமிழக அரசின் உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணி !!

தமிழக அரசின் உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணி !!

தமிழக அரசின் புள்ளியியல் துறையில் 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

பணியின் விவரம் -

Assistant Statistical Investigator in the Department of Economics and Statistics. (Tamilnadu General Subordinate Service).

மொத்த காலி பணியிடங்கள் - 268 (பொது - 82, பிற்பட்டோர் - 72, பிற்பட்டோர் (முஸ்லிம்) - 9, மிகவும் பிற்பட்டோர் - 54, எஸ்சி - 41, எஸ்சி (அருந்ததியர்) - 8, எஸ்டி - 3.

 

வயது வரம்பு -

1.7.2015 தேதியின் படி 18 முதல் 30க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வி தகுதி -

1.7.2015 தேதியின் படி Statistics பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது Statistics பாடத்தை துணைப்பாடமாகக் கொண்டு Mathematics, Computer Science, Economics, Computer Applications ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது Operations Research/ Economics/ Mathematical Economics பிரிவுகளில் முதுநிலை பட்டப்படிப்பு.

10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என்ற முறையில் முடித்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் நடைபெறும்.

 

ஊதியம் -

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

 

தேர்வு கட்டணம் -

ரூ.150. (விண்ணப்ப கட்டணம் ரூ.50 + தேர்வு கட்டணம் ரூ.100). விண்ணப்ப கட்டணம் செலுத்தி ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். கட்டணத்தை அஞ்சல் அலுவலகம் அல்லது இந்தியன் வங்கியின் மூலம் செலுத்தலாம் அல்லது ஆன்லைனில் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 3.6.2015.

போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியின் மூலம் கட்டணம் செலுத்த கடைசி நாள் - 5.6.2015.

ஆன்லைனில் தேர்வு நடைபெறும் நாட்கள் - 11.7.2015

முதல் தாள் காலை 10 முதல் 1 மணி வரை பிறகு இரண்டாம் தாள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

மேலும் தகவலுக்கு www.tnpsc.gov.in அல்லது http://tnpscexams.net/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

  23 Jun 2015
User Comments
28 Apr 2017 21:18:13 viswanathan said :
No
16 Oct 2017 11:09:41 Vasanthi said :
Encomis
16 Oct 2017 11:11:13 Vasanthi said :
Economics
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
Indbank Recruitment 2017 04 Research Analyst Posts
Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO)Recruitment 2017
NLC Recruitment 2017 49 Apprentices Posts
TN Economics and Statistics Department Recruitment 2017 14 Office Assistant Posts
TNRD Recruitment 2017 16 Office Assistants, Drivers Posts TNRD Job Vacancy 2017 2018 16 Office Assistants, Drivers Posts | Tamilnad
Are you searching for Accenture company jobs? RS 3.15 LPA Apply Here
Are you searching for Accenture company jobs? per annum-300000/-Apply Here
Are you searching for infosys company jobs?
விமானத்துறையில் பத்தாம் வகுப்பு முடித்தோற்கு வேலைவாய்ப்பு !!
பத்தாம் வகுப்பு படித்தோருக்கு மத்தியஅரசு வேலைவாய்ப்பு !!