Home  |  திரை உலகம்

எனக்கு ஏற்ற ஜோடி நயன்தாராதான் : சொல்கிறார் ஆர்யா !!

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடித்துள்ள படம் இரண்டாம் உலகம். இந்த படம் வரும் 22ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதை ஒட்டி சென்னையில் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில்,  

 

செல்வராகவன் என்னிடம் இரண்டாம் உலகம் படத்தின் கதையை கூறியபோது இதை எப்படித் தான் படமாக்கப் போகிறாரோ என்று நினைத்தேன். ஆனால் தற்போது படத்தை பார்த்தால் அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இத்தகைய பெரிய பட்ஜெட் மற்றும் லேசில்லாத கதையை படமாக்க நிறைய திட்டமும், தில்லும் வேண்டும். இந்தப் படம் எனது கேரியரில் மிகப் பெரிய படங்களில் ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். செல்வா நினைத்திருந்தால் வேறு ஹீரோக்களை நடிக்க வைத்திருக்கலாம். 

 

பெரிய பட்ஜெட் என்பதால் பெரிய ஹீரோவை நடிக்க வைத்திருந்திருக்கலாம். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்ததற்கு செல்வாக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கடவுள் நான் கடவுள், இரண்டாம் உலகம் என்று ஆண்டுக் கணக்கில் எடுக்கும் படங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். பாலா, செல்வராகவன் ஆகியோர் ஆண்டுக் கணக்கில் படத்தை எடுப்பதற்காக நான் வருந்தவில்லை. ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வர அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு பிடித்த நடிகை யார் என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, நயன்தாரா எனக்கு பிடித்த நடிகை நயன்தாரா. அவர் தான் எனக்கேற்ற ஜோடி என பளிச்சென பதில் ஆர்யா..

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்