Home  |  திரை உலகம்

அஜீத்துக்கு வில்லனான அரவிந்த் சாமி மற்றும் அருண் விஜய் !!

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகிறார். 


இந்த படத்தில் அஜீத்துடன் அனுஷ்கா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகிறது. 


இப்படத்தில் கௌதம் மேனனோடு இணைந்து பிரபல இந்தி கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவன் பணியாற்ற இருக்கிறார். இந்நிலையில் படம் பற்றி மேலும் சில தகவல்கள் வந்துள்ளன. அஜித் - கெளதம் மேனன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதியாகி உள்ளது.


மேலும் படத்தில் அஜித்திற்கு இரண்டு வில்லன்களாம். அந்த வில்லன்களாக அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இருவரும் இதுவரை நாயகர்களாக மட்டும் நடித்து பழக்கப்பட்டவர்கள். முதன் முறையாக இந்தப் படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்கள். பொதுவாக கௌதம் மேனன் படமென்றால் அதில் ஹீரோவுக்கு சமமான வேடம் வில்லன்களுக்கும் இருக்கும். அந்த அடிப்படையில்தான் இருவரும் வில்லன்களாக நடிக்க ஒப்புக்கொண்டார்களாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்