Home  |  திரை உலகம்

ஆரம்பம் (Arrambam )

ஆரம்பம் (Arrambam )

Movie Name: Arrambam ஆரம்பம்
Hero: AJITH KUMAR
Heroine: NAYANTARA
Year: 2013
Movie Director: VISHNUVARDHAN
Movie Producer: Sri Sathya Sai Movies
Music By: YUVAN SHANKAR RAJA

M.sc gold medalist ஆர்யா, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மீடியாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற லட்சியத்துடன் உடன் படிக்கும் டாப்ஸியை ஒருதலையாக காதலிக்கிறார். படிப்பு முடிந்ததும் டி.வி. நிருபர், தொகுப்பாளினி. டாப்ஸி மீது love ஆர்யாவுக்கு. சென்னையில் படிப்பு முடித்து மும்பைக்கு வேலைக்கு போகும் ஆர்யா, அங்கு உடன் படித்த நயன்தாரா, டாப்ஸியால், அஜீத்தின் நட்பை பெறுகிறார். ஆர்யாவின் நட்பை தப்பாக்கி அவர் கையாலேயே பிரபல டி.வி. சேனல் ஒன்றை செயலிழக்க செய்து, அடுத்து சுவிஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டிருக்கும் அரசியல் புள்ளிகளுக்கும், அவர்களது காசுக்கும் குறி வைக்கிறார். கூடவே போலீஸிலும், அரசியலில் பெரும் பதவியிலும் இருந்து கொண்டு திருட்டுத்தனமாக தீவிரவாதிகளுக்கு உதவும் கருப்பாடுகளுக்கு கட்டம் கட்டுகிறார். ஒரு கட்டத்தில் அஜீத்-நயன்தாரா கோஷ்டியை போலீஸில் மாட்டிவிடும் ஆர்யா-டாப்ஸி ஜோடி அவ்வாறு நடந்து கொண்டதற்காக அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வருந்துகின்றனர்...புரிந்துகொண்டார்கள் போல. ராணா ( அஜீத்தின் நண்பராக ) இருவரும் வெடிகுண்டை செயலழிக்க செய்யும் மும்பை போலீஸ் உயர் அதிகாரிகள். உயிர் நண்பர்களான இவருவரும், ஒரு தீவிரவாத செயலை தடுக்க செல்கின்றனர். மயிர்கூச்செரிய செய்யும் அந்நிகழ்வில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து வெளிநாட்டினரை இருவரும் உயிர் சேதம் இல்லாமல் காப்பாற்ற செய்தாலும், ஒரு தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுக்கு அஜீத் கண் எதிரேயே ராணா உயிர் துறக்கிறார். அவரது உயிரிழப்புக்கு காரணம் அவர் அணிந்திருந்த தரமற்ற புல்லட் புரூப் ஜாக்கெட்டும் தான் என கண்டு அதிரும் அஜீத், அந்நிகழ்வால் தனது உயர் அதிகாரிகளை பகைத்து கொள்கிறார்.

அஜீத்துக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டு பதவியும் பறிக்கப்படுகிறது. அஜீத், ராணா குடும்பத்தில் எஞ்சிய நயன்தாரா மற்றும் நியாயமான போலீஸ் நண்பர்களுடன் சேர்ந்து மத்திய அமைச்சரை எப்படி பழிதீர்க்கிறார் ? , ஆர்யா - டாப்ஸியின் காதல்? நயன்-அஜீத்தின் உறவு ? சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய பணத்தை அஜீத்-ஆர்யா என்ன செய்தனர்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது ஆரம்பம் படத்தின் பிரமாண்டமான மீதிக்கதை. அஜீத், அசோக்காக வழக்கம் போலவே முதல் பாதியில் பொல்லாதவராகவும், இரண்டாம் பாதியில் போலீஸாகவும் பொளந்து கட்டியிருக்கிறார். பலபேரை ஏமாற்றி அவங்க இரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்த பணம் எனும் சுவிஸ் வங்கி கருப்பு பணத்திற்கு அவர் கொடுக்கும் பன்ச் டயலாக்கில் தொடங்கி, க்ளைமாக்ஸில் சில சமயம் பழிவாங்கிதான் நியாயத்தை நிலை நிறுத்த முடியும்... என பேசும் பன்ச் டயலாக் வரை ஒவ்வொரு டயலாக்கிற்கும் தியேட்டரில் ரசிகர்களின் விசில் சப்தத்தில் அதிர்கிறது.

அஜீத் மாதிரியே ஆர்யாவும் பொளந்து கட்டினாலும் படத்தில் காமெடியன் இல்லாத குறையை ஆர்யாவை வைத்து இயக்குநர் தீர்த்து கொண்டிருப்பது தெரிகிறது நயன்தாரா, டாப்சி நாயகியரில் தொடங்கி ஆடுகளம் நரேன், கிஷோர், கிருஷ்ணா என ஒவ்வொரு நடிகர்களும் படத்திற்கு பலம். ஆரம்பம் படத்தின் ஆரம்பத்தில் மும்பையில் மூன்று இடங்களில் வெடிக்கும் வெடிகுண்டுகளுக்கும், அஜீத்துக்கும் என்ன சம்மந்தம்?, அதேமாதிரி போலீஸ் அதிகாரிகளுக்கு ஏ.கே. அஜீத் ஒரு முன்னால் போலீஸ் அதிகாரி என்பது தெரியாதது எப்படி? உள்ளிட்ட சில பல வினாக்களுக்கும், ஆரம்பம் மேலும் அமர்க்களமாக இருந்திருக்கும். ஓம் பிரகாஷின் பிரமாண்டமான ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜாவின் பிரமாதமான இசை, விஷ்ணுவர்தனின் ஹாலிவுட் பட நிகர் டைரக்ஷ்ன் எல்லாம் சேர்ந்து அஜீத்தின் ஆரம்பத்தை அழகாக ஆக்கியுள்ளன.

ஆரம்பம் ...ஆரம்பத்திலேயே அமர்க்களம்.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்