Home  |  திரை உலகம்

அரிமா நம்பி ( Arima Nambi )

அரிமா நம்பி ( Arima Nambi )

Movie Name: Arima Nambi அரிமா நம்பி
Hero: Vikram Prabhu
Heroine: Priya Anand
Year: 2014
Movie Director: Anand Shankar
Movie Producer: V CREATIONS
Music By: Sivamani


மத்திய அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் ‘அரிமா நம்பி’. குற்றச் செயல் ஒரு தொலைக்காட்சி சேனலின் வீடியோ கேமராவில் பதிவாகிவிடுகிறது. அதை ஒளிபரப்ப விடாமல் தடுப்பதற்காக சேனல் முதலாளியின் பெண்ணைக் கடத்துகிறது அமைச்சரின் அடியாள் குழு. அந்தப் பெண்ணைத் தேடி அவளது காதலன் புறப்படுகிறான். அமைச்சரின் முயற்சிகளைத் தனி மனிதனான அவன் எப்படி முறியடிக்கிறான் என்பதே கதை. ஆனந்த் சங்கர் ஒரு க்ரைம் கதையை எடுத்துக் கொண்டு அதற்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் படத்தின் வேகம் சீறிப் பாய்கிறது. இரண்டாம் பாதியில் சற்றுத் தொய்வடைந்தாலும் மீண்டும் வேகம் எடுக்கிறது. படம் முழுவதும் இருக்கும் விறுவிறுப்பு முதல் இரு காட்சிகள் ஏற்படுத்தும் பாதிப்பை செய்துவிடுகின்றன.

கதாநாயகன் உடல் பலத்தை மட்டும் நம்பாமல் மூளையையும் நம்பும் விதத்தில் திரைக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நவீன கருவிகளும் தொழில்நுட்பமும் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடத்தல், தடயம் தெரியாமல் அதை மறைத்தல் ஆகியவை சுவாரஸ்யத்தைக் கூட்டு கின்றன. சண்டைக் காட்சிகள், சேஸிங் காட்சிகள், காவல்துறை நடவடிக்கைகள் ஆகியவை விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. வங்கிக் கொள்ளை மூலம் நாயகன் செய்யும் தந்திரம், யூ டியூபில் வீடியோவை ஏற்றும் முயற்சி, நண்பனால் ஏற்படும் திருப்பம், போலீஸ் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நாயகன் போடும் திட்டங்கள் ஆகியவை விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. கிளைமாக்ஸில் வரும் திருப்பம் சுவாரஸ்யமாக இருந்தாலும் நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. போலீஸால் துரத்தப்படும் இளைஞன் மத்திய அமைச்சரைத் தனியாகச் சந்திக்கும் காட்சி திரைக்கதையின் சுவாரஸ்யத்துக்கு உதவியிருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமே இல்லை. அதிமுக்கியமான ரகசியம் அடங்கிய மெமரி கார்டு கையில் கிடைத்ததும் அதை இன்னொரு பிரதி எடுத்துவைத்துக்கொள்ளவே யாரும் நினைப்பார்கள். புத்திசாலிகளான கதாநாயகனுக்கும் நாயகிக்கும் அது தோன்றாமல் இருப்பது ஆச்சரியம்தான்.

பல காட்சிகள் நுட்பமாகக் கையாளப்பட்டுள்ளன. அமைச்சரின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக கேமரா மொபைல் போனை அவர் எதிரில் வைத்துக் கேள்விகள் கேட்பது, போலீஸை திசை திருப்புவதற்காகச் செய்யும் உத்திகள், தனியார் இணையத் தொடர்பு அறுந்த நிலையில் அரசுக்குச் சொந்தமான இணைய வழிகளை மட்டும் பயன்படுத்துதல் எனப் பல காட்சிகள் கவனமாக எடுக்கப்பட்டுள்ளன. கடத்தி வந்த பெண்ணைக் கொல்ல வேண்டிய அடியாள் அப்படிச் செய்வதற்கு முன்பு வல்லுறவு கொள்ள முனைவது அதிர்ச்சியூட்டும் யதார்த்தம். சண்டை, ஆக்ரோஷம் எல்லாம் விக்ரம் பிரபுவுக்கு நன்றாக வருகிறது. ப்ரியா ஆனந்த் படத்துக்கு வசீகரம் கூட்டுகிறார். காதல் காட்சிகளிலும் அபாயத்தில் சிக்கிக்கொள்ளும்போதும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் அவர் கண்கள் நன்கு ஒத்துழைக்கின்றன. ஓரிரு காட்சிகளே வந்தாலும் எம்.எஸ்.பாஸ்கர் மனதில் நிற்கிறார். அமைச்சராக வரும் ஜே.டி.சக்கரவர்த்தியின் கண்கள் வில்லத்தனத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்துகின்றன. இசை டிரம்ஸ் சிவமணி. ஒளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர். படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுவதில் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றன.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்