Home  |  திரை உலகம்

அரண்மனை திரை விமர்சனம் !!

இயக்கம் : சுந்தர் சி


நடிப்பு : சுந்தர் சி, வினய், ஆண்ட்ரியா, ஹன்சிகா மோத்வானி, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா 


இசை : பரத்வாஜ் 


காமெடி படம் இயக்குவதில் வல்லவரான சுந்தர்.சி, தீயா வேலை செய்யனும் குமாரு படத்தை தொடர்ந்து இயக்கி இருக்கும் படம் தான் அரண்மனை. காமெடிக்கும், திரில்லருக்கும் பஞ்சமே இல்லாத, இந்த படத்தின் கதையைப் பற்றி இங்கு காண்போமா...


பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில் ஒரு மிகப் பெரிய பழைய அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையை பூர்வீக சொத்தாக கொண்ட, வினய் குடும்பம், அந்த அரண்மனையை விற்பதற்காக ஊருக்கு வருகிறார்கள். அரண்மனையை அந்த கிராமத்தின் முக்கியப் புள்ளியான சரவணன் பெயருக்கு மாற்றுவதற்காக ஏற்பாடு செய்கிறார்கள். 


அரண்மனையை விற்றுவிட்டு வந்த வேகத்தில் திரும்பிப் போய்விடலாம் என்று பார்த்தால், அரண்மனை பத்திரம் தண்ணீர் பட்டு அழிந்து போயிருக்கிறது. அதனால் பத்திரத்தை தயார் செய்துதான் அரண்மனையை விற்க முடியும் என்ற நிலையில் இன்னும் சில நாட்கள் அரண்மனையில் தங்கியிருப்பது என்று முடிவு செய்கிறார்கள். 


அரண்மனையில் இருந்த மூன்று பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். பேய் இருப்பதாக வினயின் மனைவியான ஆண்ட்ரியாவும், தங்கையான ராய் லஷ்மியும் கூறுகின்றார்கள். ஆனால் அதை நம்பாத வினய், அரண்மனையை சரவணன் பெயருக்கு எழுதிக் கொடுக்கும் வேலையில் மும்முரமாகிறார். அரண்மனைக்கு குறி சொல்ல குடுகுடுப்பைக்காரன் அரண்மனையில் பேய் இருப்பதாகவும் ஒருவர் உடம்பில் அது புகுந்துவிட்டதாகவும் சொல்கிறான். 


ஆன்ட்ரியாவின் அண்ணனான சுந்தர் சி அந்த அரண்மனைக்கு வருகிறார். அந்த அரண்மனையில் பேய் இருப்பதை உணர்த்துவதாக சில சம்பவங்கள் நடக்கின்றன. 


கொஞ்சம் கொஞ்சமாக இந்த விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார் சுந்தர்.சி. பேயாக(ஹன்சிகா) வரும் அந்த பெண் யார்? எதனால் அவர் இப்படி ஆன்ட்ரியாவின் உடம்புக்குள் புகுந்திருக்கிறார்? ஆன்ட்ரியாவை அந்த பேயின் பிடியிலிருந்து சுந்தர்.சி காப்பாற்றினாரா? பேயை விரட்டினார்களா என்பது அரண்மனையின் மீதி கதை.


படத்தின் கதாநாயகன் என இரண்டு பேர் இருந்தாலும், படத்தில் நாயகிகளின் கதாபாத்திரங்கள் தான் ரசிகர்களுக்கு அழுத்தமாக பதிகிறது. 


சுந்தர்.சியும், வினையும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். வினையின் மனைவியாக வரும் ஆண்ட்ரியா படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் செம... ஹன்சிகாவின் கதாபாத்திரம் சிறிது நேரமே வந்தாலும் படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரமாக இருக்கிறது.  ராய் லட்சுமி கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


படம் முழுவதும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத வகையில் சந்தானம் மற்றும் மனோபாலா, கோவை சரளா, லொள்ளுசபா சாமிநாதன், கணேஷ்கர் ஆகியோரின் கூட்டனி கலகலப்பை அள்ளி கொட்டியிருக்கிறது.


பரத்வாஜின் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும் பின்னணி இசை பட்டைய கிளப்பி இருக்கிறது.  


மொத்தத்தில் அரண்மனை, காமெடி கலந்த ஒரு திரில்லர் விருந்து....

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்