Home  |  அறுசுவை

அரைத்து விட்ட சாம்பார் (grind diameter sambar)

தேவையானவை :

 

துவரம் பருப்பு - 1/2 கப்

முருங்கைக்காய் - 1  (நீளதுண்டுகளாக நறுக்கியது)

சாம்பார் வெங்காயம் - 5 (இரண்டாக வெட்டியது)

தக்காளி - 1 (பொடித்தது)

புளிக்கரைசல் - 2 கப்

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன் 

 

வறுத்தரைக்க தேவையானவை :

 

காய்ந்த மிளகாய் - 6 

தனியா - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

எண்ணை - 2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/4 டீஸ்பூன்

 

தாளிக்க தேவையானவை :

 

எண்ணை - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

 

செய்முறை:

 

1.குக்கரில் துவரம் பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வறுக்கக் கொடுத்துள்ளப் பொருட்களைப் போட்டு சற்று சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்தப்பின் மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும், அரைத்த விழுதில் சேர்த்துக் கொள்ளவும்.

 

2.அடுப்பில் ஒரு அடிகனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் அத்துடன் முருங்கைக்காய் அல்லது நறுக்கி வைத்துள்ள வேறு காயைப் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றையும் போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து, காய் வேகும் வரை கொதிக்க விடவும். காய் வெந்ததும் புளித்தண்ணீரைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள விழுது, வேக வைத்துள்ள பருப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.

Grind Diameter Sambar

Ingredients for Grind Diameter Sambar:

 

Red Gram-1/2 Cup

Drumstick-1 (Chopped Lengthly)

Sambar Onion-5 ( Chopped)

Tomato-1 (Chopped)

Tamarind Juice-2 Cup

Sambar Powder-1 Tsp

Turmeric Powder-1/4 Tsp

Salt-1 Tsp

 

Ingredients for Fry and Grind:

 

Dry Chilly-6

Coriander-1 Tbsp

Grated Coconut-1 Tbsp

Oil-2 Tsp

Cumin-1/4 Tsp

Fenugreek-1/4 Tsp

Bengal Gram-1/2 Tsp

Pepper-1/4 Tsp

 

Ingredients for Seasoning:

 

Oil-2 Tsp

Mustard-1/2 Tsp

Asafoetida-1 Pinch

Curry Leaves-Little

 

Procedure to make Grind Diameter Sambar:

 

1. In a cooker, add red gram, turmeric powder and allow to boil well. Heat oil in a pan, add 2 tea spoons of oil and put given frying ingredients and fry till get golden color. Allow to cool and grind them and wash the mixie add the water in to grinded paste.

2. Heat 1 tea spoon of oil in a deep pan, add onion and saute well. Then add tomato and saute till tomato turns pulpy. Then add chopped drumstick, sambar powder, turmeric powder, salt and pour water to cover the vegetables and allow to boil. When vegetables boiled, add tamarind juice and boil well. When starts boiling, add grinded paste, boiled dhal and allow to boil for 1 minute and then remove from flame.

 

 

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!