Home  |  திரை உலகம்

கௌதம் கார்த்திக், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரங்கூன்....

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கிய கடல் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 


கடல் படத்தை தொடர்ந்து அவர், ‘என்னமோ ஏதோ’ என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த இரண்டு படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இருந்தாலும் அவருக்கு படவாய்ப்புகள் 


வந்து கொண்டே இருக்கிறது. தற்போது, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ‘வை ராஜா வை’, ‘சிப்பாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் கௌதம் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ஏ.ஆர்.முருகதாசிடம் ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்படத்திற்கு ‘ரங்கூன்’ என பெயர் வைத்திருக்கின்றனர். பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 


விரைவில் ரங்கூன் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்