Home  |  திரை உலகம்

ஆப்பிள் பெண்ணே ( Apple Penne )

ஆப்பிள் பெண்ணே ( Apple Penne )

Movie Name: Apple Penne ஆப்பிள் பெண்ணே
Hero: Vatsan
Heroine: Aishwarya Menon
Year: 2013
Movie Director: KALAIMANI
Music By: MANI SHARMA


ரோஜா அம்மா நடிகை இப்போது. ஆனா அந்த அம்மா கேரக்டர் சரியான கதைக்கு சரியான கேரக்டரு. ஒரு கிராமத்துல அம்மா பேரு அம்சவேணி, சும்மா வயசு பசங்கலருந்து, வயோதியகர்கள் வர ஜொல்லு விட வைக்கிற கேரக்டரு, அவங்களுக்கு ஒரு பொண்ணு பேரு கோமலவள்ளி (புதுமுகம் ஐஸ்வர்யா மேனன்) ஸ்கூல் ஸ்டூடண்ட். அப்பா இல்லாத பொண்ண , ஹோட்டல் கடை நடத்தி கஷ்டப்பட்டு வளக்குறாங்க அம்சவேணி, இடையில இவுங்களுக்கு வில்லனா ஏட்டு ஆறுமுகம் (தம்பி ராமையா). அம்மாவோட ட்ரஸ், பேச்சு இதெல்லாம் வெச்சு தப்ப பேசறாங்க. கோமலவள்ளி அவங்கள தப்ப புரிஞ்சுகிட்டு வீட்ட விட்டு வெளியேறிடறாங்க. அதுக்கப்பறம் தாய பிரிஞ்ச இளம் பறவையா வாழ்க்கையில ஏகப்பட்ட விபரீதங்கள சந்திக்கிறாங்க. அந்த விபரீதம்லா என்ன ,யாரால நடந்துச்சு, அதுலருந்து கோமலவள்ளி எப்படி மீண்டாங்கங்கறது மீதி கதை. அம்மாவா ரோஜா அட்டகாசமா வெளிப்படுத்தியிருக்காங்க. ராமையா வில்லனாவும் ஒரு ரவுண்டு வரலாம். புதுமுக நடிகை ஐஸ்வர்யா பாதி நேரம் ஓடுறாங்க, கொஞ்ச நேரம் நடிப்புலயும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் . வத்சன் வர காட்சிகள் படத்தோட விறு விறுப்ப லைட்டா குறைக்கிது.

திட்டு வாங்குறதவே படம் முழுக்க செஞ்சுருக்காரு. சுரேஷ் கடைசியில வந்தாலும் திடீர் திருப்பம். இசை மணிஷர்மா கொஞ்சம் ஏமாற்றம். கிராமத்து நடவடிக்கைகள சரியா படம் பிடிச்சுருக்கு பிரபாகரோட கேமரா. டைரக்டர் ஆர். கே.கலைமாமணி, அங்கங்க வர்ற தேவையில்லாத ஐடம் பாட்ட குறச்சுருந்தா படம் இன்னும் ஸ்பீடா இருந்துருக்கும். கூடவே அனைத்து தரப்பு மக்களும் பாக்க வேண்டிய படமா இருந்துருக்கும். மொத்ததுல அம்மா, அப்பா நமக்கு நல்லதுதான் நினைப்பாங்க, அவங்கள உதறித் தள்ளினா வாழ்க்கை நரகம்ங்கற வித்யாசமா சொன்ன ஆர்.கே.கலைமாமணிக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பா பள்ளி, கல்லூரி டீனேஜ் பசங்க பாக்க வேண்டிய படம்.

படம் பாக்கலாம்... ரசிகர்கள் விவேகத்துடன் செயல் படுவது நல்லது.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்