Home  |  அறுசுவை

ஆப்பிள் மஃபின் (Apple Muffin)

ஆப்பிள் மஃபின் (Apple Muffin)

தேவையானவை :

 

மாவு – 4 கப்

மாஜரின் – ஒரு கப்

சீனி – ஒரு கப்

ஆப்பிள் – 2

ப்ரவுன் சுகர் – 3/4 கப்

முட்டை – 4

பால் – ஒரு கப்

உப்பு – ஒரு டீஸ் ஸ்பூன்

நட்மெக் தூள் – 2 டீஸ் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் – 4 டீஸ் ஸ்பூன்

வெனிலா எசன்ஸ் – 2 டீஸ் ஸ்பூன்

பட்டை தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்

 

செய்முறை :

 

1.ஒரு சல்லடையில் மாவுடன் பட்டை தூள், உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் நட்மெக் தூளை சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும். அவனை 350 Fல் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும்.ஆப்பிளை தோல் நீக்கி விட்டு நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

 

2.ஒரு பாத்திரத்தில் இரு வகை சீனிகளுடன் மாஜரீனை போட்டு நன்கு 4 நிமிடங்கள் அடித்துக் கொள்ளவும்.பின்னர் அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும். இப்பொழுது அதிக நேரம் அடிக்க தேவையில்லை.பிறகு வெனிலா எசன்ஸை சேர்த்து இன்னும் சில நொடிகள் அடித்துக் கொள்ளவும்.

 

3.சலித்து வைத்திருக்கும் மாவுகலவையை இரண்டாக பிரித்து அதில் ஒரு பகுதியை முதலில் சேர்த்து அடிக்கவும்.இதனுடன் அரை கப் பாலை சேர்த்து அடித்துக் கொண்டு அதனுடன் மீதமுள்ள மாவு கலவையை சேர்த்து அடித்துக் கொள்ளவும். கடைசியாக மீதிமிருக்கும் பாலையும் ஊற்றி அடிக்கவும்.

 

4.மேலும் இந்த கலவையுடன் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும்.மஃபின் கப் தட்டுகளில் பேப்பர் கப்புகளை வைத்து மஃபின் கலவையை முக்கால் பாகம் நிரப்பி வைக்கவும். பிறகு முற்சூடு செய்து வைத்திருக்கும் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

சுவையான ஆப்பிள் மஃபின் ரெடி.

Apple Muffin

Ingredients for Apple Muffin :


Maida Flour - 4 Cups,

Mazarin - 1 Cup,

Sugar - 1 Cup,

Apple - 2,

Brown Sugar - 3/4 Cup,

Egg - 4,

Milk - 1 Cup,

Salt - 1 Tsp,

Nutmeg Powder - 2 Tsps,

Baking Powder - 4 tsp,

Vanilla Essence - 2 Tsp,

Cinnamon Powder - 1 TBsp.


Method to make Apple Muffin :


1. Mix up the maida, cinnamon powder, salt, baking powder and nutmeg powder all together and mix up well. Then seive it well. Preheat the oven for 350 F. Remove the apple skin and chopped it finely. 

2. Take a bowl and mix up the powdered sugar and brown sugar with mazarin. Blend it well. Then pour the egg along with them. Then add vanilla essence along with them and blend it well. 

3. Then add 1/2 part of maida with beaten egg. Then add milk along with it and blend it well. Then add the remained maida along with them and add milk and blend it well. 

4. Then mix up the chopped apple along with them. Then stir it well. Then keep the paper cups on muffin plates. Pour the mixture paste in cups. Filled it 3/4 place. Then keep this plate in preheated oven.


Tasty Apple Muffin is ready to eat.

  11 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!