Home  |  அறுசுவை

ஆப்பிள் அல்வா

ஆப்பிள் அல்வா

தேவையானவை :
சிவப்பு ஆப்பிள் - 3
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் 
முந்திரிப்பருப்பு - சிறிது
செய்முறை:
1.நன்கு கழுவிய ஆப்பிளை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துகொள்ளவும்.
2.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
3.அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு, அரைத்து வைத்துள்ள ஆப்பிள் பழ விழுதைப் போட்டு வதக்கவும். 
4.அடுப்பை மிதமான தீயில் வைத்து, விழுதிலுள்ள நீர் வற்றி, சற்று கெட்டியானவுடன் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். 
5.பின்னர் அதில் கேசரி அல்லது ஆரஞ்சு வண்ணத்தைப் போட்டு, விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். 
6.அல்வா சற்று இறுகி, வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.சுவையான ஆப்பிள் ஹல்வா ரெடி.

  28 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!