Home  |  திரை உலகம்

அப்பாவுக்கு கல்யாணம் ( Appavukku Kalyanam)

அப்பாவுக்கு கல்யாணம் ( Appavukku Kalyanam)

Movie Name: Appavukku Kalyanam அப்பாவுக்கு கல்யாணம்
Hero: PANDIAN
Heroine: Rasikapriya
Year: 2013
Movie Director: Arumugasamy
Movie Producer: SKM Media
Music By: Charlas Dhana


கதாநாயகன் பாண்டியன் வெட்டியான் வேலை. நாயகி ரசிகப்ரியா 12-ம் வகுப்பு படிக்கிறார். நாயகியின் பெயரில் சொத்து இருக்கிறது. ஆனால், அப்பாவும், அம்மாவும் உயிரோடு இல்லை. இவரது அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வந்த சித்தியும், அவளுக்கு பிறந்த மகனும் சேர்ந்து இவளிடமிருந்து எப்படியாவது சொத்தை எழுதி வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.இது தெரிய வர, வீட்டை விட்டு வெளியேறுகிறாள் ரசிகப்ரியா. காடு வழியாக தப்பித்துச் செல்லும்போது சில பேர் நாயகியை விரட்டுகின்றனர். அங்கே வரும் நாயகன் அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்.

அவளிடம் என்னை கல்யாணம் செய்துகொண்டது போல், தன் அம்மாவிடம் நடிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். அதனால், தன்னுடைய வீட்டில் பாதுகாப்பாக இருக்கலாம் எனவும் யோசனை கூறுகிறான்.
அவனது அம்மாவும் ஏற்றுகொள்கிறார்.நாளடைவில் நாயகனுக்கு நாயகிமீது காதல்..... , திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள பணம் வேண்டும். எனவே, பணத்தை ஏற்பாடு செய்வதற்காக தனது வீட்டுக்கு சென்று தனக்கு வேண்டியதை எடுத்துவர நாயகி முடிவு செய்கிறாள். பணத்தை எடுத்து வந்து நாயகனை கரம்பிடித்தாரா? இல்லை சித்தியின் கையில் அகப்பட்டு சிக்கிக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

நாயகன் எம்.பாண்டியன் முகம் முழுவதும் தாடியுடன் ஒரு வெட்டியானுக்குண்டான மிடுக்குடன் படத்தில் வருகிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் ஓரளவு.
நாயகி ரசிகப்ரியா பார்க்க அழகு, நடிப்பில் ஏனோ தேறவில்லை. காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. கவர்ச்சி என்ற பெயரில் காமெடி.. நாயகனின் அம்மாவாக வரும் லட்சுமி நடிப்பில் மிளிர்கிறார்.
அழகான கதையை நேர்த்தியான காட்சிகளாக படம்பிடிக்காமல் இயக்குனர் ஆறுமுகசாமி கோட்டை விட்டிருக்கிறார். முக்கியமான கதாபாத்திரங்களின் பெயர்களை சொல்லாமலேயே கதையை நகர்த்தி குழம்ப வைத்திருக்கிறார்.
சார்லஸ் தனா இசையில் பாடல்கள் நன்றாக இல்லை. சி.கணேஷ்குமார் ஒளிப்பதிவு எடுபடவில்லை. கல்யாணம் கலையும் இல்லை,....இது கல்யாணமே இல்லை.

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்