Home  |  திரை உலகம்

அஞ்சான் ( Anjaan )

அஞ்சான் ( Anjaan )

Movie Name: Anjaan அஞ்சான்
Hero: SURIYA
Heroine: SAMANTHA
Year: 2014
Movie Director: LINGUSWAMY
Movie Producer: THIRUPATHI BROTHERS
Music By: YUVAN SHANKAR RAJA

சூர்யா காணாம போன அண்ணனைத் தேடி மும்பைக்கு வர்றார். அப்போ அண்ணன் சூர்யாவை ஒவ்வொரு விலாசத்திலும் தேடி விசாரிக்க, அண்ணனைப் பத்தி ரசிகர்களாகிய நமக்கு சாதா அண்ணன் இல்ல, தாதா அண்ணன் ராஜூபாய்னு நிறைய பில்ட்-அப். நிழல் உலகத் தாதாக்கள் கதை, தன்னிலை மறந்த நிலையில அவங்களை அறியாம ஏதாச்சும் நல்லதும் செஞ்சுருப்பாங்கனு மக்கள் மூலம் காட்டறாங்க, ஆனா சண்டைக்காட்சிக்கு முக்கியத்துவம் தரவே லிங்குசாமிக்கு நேரம் போனதால சென்டிமெண்ட் காட்சிங்க, நாயகர்கள் ஏழைகளுக்கு உதவற காட்சிகள் வைக்க நேரமில்லை.

படத்துல இருக்கிற பெரும்பாலான பாத்திரங்களோட குலத்தொழிலே தாதாயிஸம் தான். நாயகர்கள் கடத்தல் எல்லாம் செய்து பெரிய ஆட்களா வளர்ந்துட்டு வர்றாங்க. அப்போ நடக்கிற போட்டியில எதிரியை உசுப்பி விட அந்த எதிரி இந்த ஹீரோக்களைப் போட்டுத் தள்ளறாங்க. இதுல திருப்புமுனையா இருக்கிற காட்சிகளைச் சொல்லிட்டா படத்துக்கு போறவங்களுக்கு சஸ்பென்ஸ்னு ஒன்னும் இருக்காது. தம்பி சூர்யா யாரு? அண்ணன் கிடைச்சாரா? பழி வாங்கினாரா? இதெல்லாம் என்னனு வெள்ளித்திரையில பார்த்துக்கலாம். படத்துல சமந்தாவுக்கு நல்ல ரோலா? டான் கதையில இவ்வளவுக்கு நடிக்கக் கிடைச்சதே புண்ணியம். சமந்தா ரசிகர்களுக்காக என்ன செய்யணுமோ அதைச் செஞ்சுருக்கார்.

காமெடிக்கு சூரியை விட சமந்தா போலீஸ் கமிஷனரா வர்ற சமந்தா அப்பா நல்ல பொருத்தம். பொண்ணை நீ பாட்டுக்கும் இஷ்டத்துக்கும் அவனோட சுத்தும்மானு விட்டுருக்கார். படத்துல போலீஸ்க்கு முதல்ல வாய்ப்பு கொடுத்ததோட சரி. படம் பார்த்துட்டு வெளில வரும் போது யாரையாச்சும் தூக்கிடலாமா? போட்டுத் தள்ளிடலாமானு யாரையாச்சும் அடிக்கணும் போல வெறியா இருக்கிறது. அமைதியான கிருஷ்ணா பாத்திரத்திலும் அதிரடியான ராஜூ பாய் பாத்திரத்திலும் அசத்திப் படத்தைத் தூக்கி நிறுத்துபவர் சூர்யா. ஆடலில் நல்ல முன்னேற்றம். அதிரடியில் அனல் பறக்க எதிரிகளைத் துவம்சம் பண்ணிடறார். காதல் எல்லாம் வேணாம்னு சமந்தாகிட்ட சொல்லப் போற நேரத்துல அவங்க கண்ணைப் பார்த்துட்டு தடுமாறிக் காதல்ல விழறதும் நண்பருக்காக எதிரியை அடைச்சு வச்சு சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதும் துரோகம் செய்த கூட்டாளிகள் ஒவ்வொருத்தரையும் அழிக்கும் போதும் நடிச்சிருக்கார்.

இவருக்கு இணையான ஹீரோ துப்பாக்கி வில்லன் வித்யூத் ஜம்வால் படம் முழுக்கக் குண்டு மழையில். பார்க்கலாம்...!

   15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்