Home  |  திரை உலகம்

அனேகன் ஒரு காதல் கதையாம் : சொல்கிறார் கே.வி.ஆனந்த் !!

வேலையில்லா பட்டதாரி படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் அனேகன். 


இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தின் தனுஷ்க்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். 


அது மட்டுமல்லாமல், தனுஷூடன் சேர்ந்து, நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


அனேகன் படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு. 


இந்நிலையில், அனேகன் குறித்து, அதன் இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளதாவது, அனேகன் படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 


அனேகன் என்ற பெயர் ஒரு தனிமனிதனை குறிப்பிடுவது அல்ல. பல மனிதர்களை உள்ளடக்கியது. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வாசகத்தை வைத்துத்தான் இப்படத்தின் தலைப்பை தேர்வு செய்துள்ளோம். 


வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் தனுஷும், அம்ரியா தஸ்தூரும் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளனர் என படத்தைப் பற்றி கே.வி.ஆனந்த் கூறியுள்ளார். 


இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனங்களை சுபா எழுதியுள்ளார். பாடல்களை இந்த மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 

அனேகமாக படம் நவம்பரில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்