Home  |  தொழில் நுட்பம்

உங்க ஆன்டிராய்டு போன் அடிக்கடி ஹாங்(hang) ஆகுதா?இந்த பிரச்னை சரியாக்க எளிய வழிமுறைகள்!

உங்க ஆன்டிராய்டு போன் அடிக்கடி ஹாங்(hang) ஆகுதா?இந்த பிரச்னை சரியாக்க எளிய வழிமுறைகள்!

தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மிகவும் பயன்பாடு அதிகரித்துவிட்டது. வாங்கிய போது சூப்பராக செயல்பட்ட ஸ்மார்ட் போன், சில நாட்கள் கழித்த பிறகு ஹாங் ஆகி பயன்படுத்துபவரின் பொறுமையை சோதிக்க ஆரம்பித்துவிடும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் பலரும் தவிப்பர். ஆனால் சில வழிமுறைகளை பின்பற்றினால் பிரச்சனை சரியாகி விடும். ஆன்டிராய்டு போன் ஹாங் ஆகுதா?

1. முதலில் உங்கள் போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

2. பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள். ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்.

3. பவர் பட்டன் மூலம் உங்க போன் ஆஃப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள்.

4. உங்களால் போனை ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள். 5. உங்கள் போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்து விடுங்கள்.

6. போன் அடிக்கடி ஹாங் ஆனால் பேக்ட்ரி ரீசெட் கொடுங்கள். இது உங்கள் போனின் பிரச்சனைகளை சரி செய்து விடும் ஆனால் இதை மேற்கொண்டவுடன் உங்கள் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களும் அழிந்துவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஐபோனும் ஹாங் ஆகுதா? ஆன்டிராய்டு போன் ஹாங் ஆவது போல் ஐபோனும் அடிக்கடி ஹாங் ஆகி பிரச்சனை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்.

1. ஆன்டிராய்டு போன்களை போலவே உங்க ஐபோனையும் ரீஸ்டார்ட் செய்யுங்கள்.

2. நீங்கள் பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை டெலீட் செய்துவிடுங்கள், போதுமான மெமரி இல்லாததாலும் போன் ஹாங் ஆகலாம்.

3. பிரச்சனை இன்னும் சரியாகாத நிலையில் ஐட்யூன்ஸ் மூலம் போனை ரீஸ்டோர் செய்யுங்கள்.

  03 Nov 2015
User Comments
14 Nov 2015 17:42:03 Prasamth g said :
Thala na mass tha pola.superrrrrrrrr
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!