Home  |  திரை உலகம்

தேசிய அளவில் வில்வித்தை போட்டிக்கு தயாராகிவரும் நடிகை அனன்யா !!

நாடோடிகள், எங்கேயும் எப்போதும், புலிவால் போன்ற படங்களில் நடித்தவர் அனன்யா. தற்போது இவர் அதிதி படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 


நடிகையாக பிரபலமடைந்த நடிகை அனன்யா ஒரு வில்வித்தை வீராங்கணை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. ஏற்கனவே இவர் வில்வித்தையில் பல விருதுகளை பெற்றுள்ளார்.வருகிற ஏப்ரல் மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் மாநில வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 2012ம் ஆண்டு நடந்த போட்டியில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார் அனன்யா. கேரள மாநில அணிக்காக தேசிய அளவிலும் விளையாடி இருக்கிறார். 


இது குறித்து நடிகை அனன்யா கூறியதாவது: 


தேசிய அளவில் வில்வித்தையில் முதல் இடம் பிடிப்பது என் லட்சியம். ஐந்து வருட போராட்டத்துக்கு பிறகுதான் மாநில அளவில் சாம்பியன் ஆனேன். சென்ற ஆண்டு சென்னையில் தேசிய போட்டிகள் நடந்தது. அப்போது நான் ஒரு தெலுங்கு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால கலந்து கொள்ள முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் முழு நேரமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். வருகிற சம்மர்ல நடக்கிற போட்டியில் கலந்துகிட்டு நிச்சயம் ஜெயிப்பேன். ஒரு நாள் தேசிய சாம்பியன் ஆவேன். என் முயற்சிகளுக்கு என் கணவர் ஆஞ்சநேயன் முழு ஆதரவும், ஊக்கமும் தந்து வருகிறார்" என்கிறர் அனன்யா.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்