Home  |  திரை உலகம்

செல்லப்பிராணிகளை காசு கொடுத்து வாங்காதீர்கள் - எமி ஜாக்சன் அட்வைஸ் !!

விலங்குகள் மீது தீராத பற்று கொண்டவர் நடிகை த்ரிஷா. சமீபகாலமாக பீட்டா(People for the Ethical Treatment of Animals – PETA) என்ற பிராணிகள் நலவாரியத்தில் தன்னை இணைத்துக்கொண்டு நாய்களின் பாதுகாவலனாக வலம்வந்து கொண்டிருக்கிறார். தற்போது இந்த அமைப்பில் புதிதாக இணைந்திருக்கிறார் எமி ஜாக்ஸன். 

 

தமிழில் 'மதராசப்பட்டினம்', 'தாண்டவம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஏமி ஜாக்சன். இவர் தற்போது ஷங்கரின் ‘ஐ’ படத்தில் விக்ரம் உடன் இணைந்து நடித்து வருகிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் பூனை மற்றும் நாய் உள்ளிட்ட ஏராளமான விலங்குகளை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வருகிறாராம். 

 

ஒவ்வொரு வீட்டிலும் விலங்குகளை வைத்து பாதுகாக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் பீட்டா அமைப்பு சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தை எடுத்துள்ளது. இந்த விளம்பரப்படத்தில் விலங்குகளை காப்பாற்றும் தேவ தூதராக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான நிக்கி லியோன்ஸ் இந்த விளம்பர படத்தை இயக்கியுள்ளார். 

 

இது குறித்து எமி ஜாக்சன் கூறியதாவது, பிராணிகளை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர்களை கருத்தில் கொண்டு ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், நாய், பூனைகளை பணம் கொடுத்து வாங்குவதை நிறுத்துங்கள். அனாதையாக எத்தனையோ பிராணிகள் சுற்றித்திரிகின்றன. சரியா உணவு இல்லாமல் நோய்களுக்கு சிகிச்சை இல்லாமல், விபத்தில் சாகும் ஆபத்துக்களோடு வாழும் இந்த விலங்குகளுக்கு கருணை காட்டுங்கள், அவற்றுக்கு நாம் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கலாம். இதனால் ஒரு வாயில்லா ஜீவனுக்கு ஆதரவு கொடுத்த சந்தோசமும் கிடைக்கும், நம்முடைய பணமும் மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார் எமி. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்