Home  |  திரை உலகம்

அம்மணி திரைவிமர்சனம்!

அம்மணி திரைவிமர்சனம்!

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும், அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களாக இயக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை மீறி நல்ல படைப்பு என்று சொல்வதே ஒரு கலைஞனுக்கான மரியாதை, அந்த வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த அம்மணியை எப்படி கொண்டு வந்துள்ளார் என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

லட்சுமி ராமகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் வேலைப்பார்க்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், ஒரு முகன் குடிகாரன், மற்றொரு மகன் ஆட்டோ ஓட்டுனர். மகள் ஓடி போய் திருமணம் செய்து விடுகிறாள்.

லட்சுமி தன் பணிக்காலம் முடிந்து ஓய்வு எடுக்கும் நிலையில் அவருக்கு குறிப்பிட்ட தொகை பணமாக வருகிறது, இதை அறிந்து மகன்கள், மகள் என அனைவரும் அவரிடம் அன்பு காட்ட நெருங்க, பிறகு என்ன ஆனது என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கிறது இந்த அம்மணி.

படத்தை பற்றிய அலசல்

லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இயக்குனராக படத்திற்கு படம் மெருகேறுகிறார், அவர் நடிப்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, ஒரு ஸ்லம்மில் எப்படி இருப்பார்களோ, அவர்களின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வருகிறார்.

பணத்திற்காக நடிக்கும் மகன்களையும், பேரனையும் காட்டிய விதம் இன்றைய தலைமுறையில் நடக்கும் பல நிகழ்வுகளை கண்முன் கொண்டு வருகிறது, கண்டிப்பாக இவர் நடத்தும் தொலைக்காட்சி ஷோ கண்டிப்பாக உதவி இருக்கும் போல.

சரி, அம்மணி என்று ஏன் படத்திற்கு டைட்டில் வைத்தார்கள்? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது, லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டிலேயே அம்மணி என்ற ஒரு பாட்டி குடியிருக்கிறார், சொந்தங்களால் துறத்தி விடப்பட்ட இவர் லட்சுமி வீட்டில் தான் குடியிருக்கிறார்.

கிட்டத்தட்டா அம்மணி தான் லட்சுமியின் ரோல் மாடல், எந்த கவலையும் இல்லாமல், இந்த வயதிலும் அவர் சந்தோஷமாக தன் காலங்களை கழிக்கின்றார் என்பதை மிக அழகாக காட்டியுள்ளனர், இதை ஒரு காட்சியில் லட்சுமி அவரிடம் கேட்கும் போது கூட ‘வெளிச்சம் சென்று விட்டால் நம் நிழல் கூட நமக்கு சொந்தமில்லை’ என்று அம்மணி சொல்வது கவித்துமவமான உண்மை.

படத்தின் ஒளிப்பதிவு இம்ரான் மிகவும் கவர்கிறார், கேவின் இசையும் கவணிக்க வைக்கின்றது, அதை விட ரெஜித்தின் எடிட்டிங் படத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்துள்ளார்.

க்ளாப்ஸ்

நடிகர்கள், நடிகைகளின் யதார்த்த நடிப்பு, குறிப்பாக அம்மணி பாட்டியில் துறுதுறு நடிப்பு.

படத்தின் வசனம் ரசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் இடைவேளை வரை கதைக்குள் நாம் செல்ல கொஞ்சம் நேரம் எடுக்கின்றது.

மொத்தத்தில் அம்மணி நேர்த்தியான அழகு

  14 Oct 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்