Home  |  ஆன்மிகம்

அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில், கொல்லங்குடி, சிவகங்கை

Name: அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில்
Temple Type: அம்மன் கோயில்
Mulavar: வெட்டுடையா காளி
Year: 500-1000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு வெட்டுடையா காளி கோயில், கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட், அரியாக்குறிச்சி- 623 556. சிவகங்கை மாவட்டம்.
Town: கொல்லங்குடி
District: சிவகங்கை [ Sivaganga ]-623 556.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, இடதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளாள். இவள் வைத்திருக்கும் கத்தியும், கேடயமும், வில்லும், அம்பும் இன்னும் மற்ற ஆயுதங்களும் தூர இருந்து பார்க்கும் போதே நமக்கு பயத்தை தோற்றுவிக்கும்.

     எவ்வளவு பெரிய தீய சக்தியாக இருந்தாலும் அதனை எல்லாம் அழித்து விடுவேன் என்று பராசக்தியின் அம்சமான அவள் சொல்வது போல இந்த காட்சி அமைந்துள்ளது. பங்குனியில் இங்கு 10 நாள் விழா நடக்கிறது. இவ்விழாவின்போது, சிவனைப்போலவே அம்பிகைக்கு 108 சங்காபிஷேகம் நடப்பது விசேஷம். இந்நாட்களில் அம்பிகை கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் பவனி வருவாள்.

     விழாவின் 9ம் நாளில் தேர்பவனியும் உண்டு. ஆடிப்பெருக்கன்று அம்பாள் சன்னதி முழுதும் பூக்களை நிரப்பி, பூச்சொரிதல் விழா விசேஷமாக நடக்கும்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!