|
||||
அருள்மிகு செல்வலலிதாம்பிகை திருக்கோயில், செல்லப்பிராட்டி, செஞ்சி, விழுப்புரம் |
||||
![]() |
||||
Name: அருள்மிகு செல்வலலிதாம்பிகை திருக்கோயில் Temple Type: அம்மன் கோயில் Mulavar: செல்வலலிதாம்பிகை Year: 1000-2000 வருடங்களுக்கு முன் Address: அருள்மிகு செல்வலலிதாம்பிகை அம்மன் திருக்கோயில், செல்லப்பிராட்டி -604 210 செஞ்சி, விழுப்புரம் மாவட்டம். Town: செல்லப்பிராட்டி, செஞ்சி District: விழுப்புரம் [ Villupuram ]-604 210. State: தமிழ்நாடு [ Tamil nadu ] Country: இந்தியா [ India ] துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் தனித்தனியாகவும், ஒரு சில இடங்களில் சேர்ந்தும் அருள்பாலிக்கும் கோயில்கள் சில உண்டு. ஆனால், ஒரே விக்ரகத்தில் மூன்று தேவியரின் அம்சங்களும் இணைந்திருப்பதை இத்தலத்தில் தரிசிக்கலாம்.இத்தல அம்மனுக்கு எட்டுக்கரங்கள், நெற்றியில் பிறைச்சந்திரன், ஐந்துதலை நாகம், சூலம் ஆகியவற்றுடன், இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டு தாமரை பீடத்தில் சாந்த சொரூபிணியாக அமர்ந்துள்ளாள். வலது திருக்கரம் பக்தர்களை காக்கும்படியும், இடது திருக்கரம் பாதத்தை நோக்கியபடியும் அமைந்துள்ளது. பின்கரங்களில் சரஸ்வதிக்குரிய அட்சரமாலை மற்றும் கமண்டலம், லட்சுமிக்குரிய சங்கு, சக்கரம், பார்வதிக்குரிய பாசம், அங்குசம் ஆகியவை உள்ளன. இந்த அம்மனை வழிபட்டால் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். |
||||
![]() |
||||
User Comments | |
|
Post your comments |