Home  |  ஆன்மிகம்

அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், சுண்டக்காமுத்தூர், கோயம்புத்தூர்

Name: அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில்
Temple Type: அம்மன் கோயில்
Mulavar: செல்லாண்டியம்மன்
Year: 500 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சுண்டக்காமுத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம்.
Town: சுண்டக்காமுத்தூர்
District: கோயம்புத்தூர் [ Coimbatore ]-.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     இங்குள்ள அம்மன் விளைநிலத்திலிருந்து வந்து காடு மேடுகளை செழிக்கச் செய்வதால் இந்த முறை என்ன பயிரிட வேண்டும் என அம்மனிடம் உத்தரவு கேட்கும் வழக்கம் இன்றைக்கும் உள்ளது. அதையே அந்த வருடம் பயிரிடுவர். இதனால் விளைச்சல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இதுவே இத்தலத்தின் சிறப்பாகும்.சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, இந்தப் பகுதியில் சுண்டைக்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும்.

     இதனால் சுண்டைக்காய்முத்தூர் என்றே ஊரின் பெயரும் அமைந்தது. ஒருநாள், சுண்டைக்காய் பயிரிட்ட நிலத்தில் ஏதோவொன்று தட்டுப்பட, அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து நிலத்தை தோண்டினர். அப்போது, பூமியில் இருந்து தென்பட்டது அம்மனின் விக்ரகம். அப்போது அங்கிருந்த பெண், நான் செல்லாண்டி ஆத்தா வந்திருக்கேன், இங்கேயே குடியிருக்கப் போகிறேன் என அருள் வந்து ஆடினாள். இதையடுத்து அம்மன் விக்ரகத்தை அருகிலேயே பிரதிஷ்டை செய்து, சிறிய கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!